ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் தாகத்தை தீர்க்க அவர்கள் தங்கி இருக்கும் அறைகளில் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீர் தேவஸ்தானம் சார்பில் ஒப்பந்த ஊழியர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஒப்பந்த ஊழியர்கள் சாலையோரம் உள்ள ஒரு குழாயில் நீரை பிடிப்பதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு வந்த பக்தர்கள் இந்த பிரச்னையில் தேவஸ்தானம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இன்று நடைபெற்ற மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.அப்போது பேசிய அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.தொடர்ந்து பேசும் போது காங்கிரஸ் கட்சி மாநில ஆட்சிகளை கடுமையாக வஞ்சித்ததாக கடுமையாக சாடினார். அப்போது அவர் , காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சட்டம் 356_யை தவறாக பயன்படுத்தி மாநிலங்களின் அரசை கலைத்தது.நாட்டில் அவரச நிலையை அறிவித்தது .மிகவும் பொறுப்புடன் செயல்படும் தேர்தல் ஆணையத்தின் நாணயத்தை குறைக்க முயற்சியில் ஈடுபடுவதாக அடுக்கடுக்கான குற்ற சாட்டுக்களை பிரதமர் மோடி முன்வைத்தார்.