சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள ஆய்வில் ஈடுபடுகிறார். பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை மைதானத்தில் நடைபெறும் விழாவில் 75,151 பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கி, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். சென்னையில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், சோத்துப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. […]