கடந்த வருடம் 20 வயதான இந்திய மாணவி ஒருவர் படிப்பிற்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். அங்கு அவரது உறவினரும் இந்திய வம்சாவளியினருமான வெங்கடேஷ் ஆர் சத்தாரு தன் வீட்டில் தங்கவைக்கபட்டுள்ளார். அதன் பிறகு அந்த பெண்ணை கல்லூரிக்கு எங்கும் அனுப்பாமல், கடந்த ஏப்ரல் மாதம் முதல் அந்த இளம்பெண்ணை சத்தாரு வீட்டில் அடைத்து வைத்து சித்தரவதை செய்துள்ளார். மேலும் உடன் அவரது நண்பரான ஸ்ரவன் வர்மா பெனுமேட்சா, நிகில் வர்மா பென்மட்சா ஆகியோரும் அந்த பெண்ணை சித்தரவதை செய்துள்ளனர். […]