ஒடிசாவில் தரையிலிருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றியடைந்துள்ளது. இந்த ஆகாஷ் ஏவுகணை சோதனை பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பால் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, இன்று (வெள்ளிக்கிழமை) ஒடிசாவின் கடற்கரை பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் புதிய தலைமுறை ஆகாஷ் என்ஜி ஏவுகணை சோதனை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. இதனை பாதுகாப்பு துறை நிறுவனங்களுடன் இணைந்து டி.ஆர்.டி.ஓ தயாரித்துள்ளது. இந்த ஆகாஷ் ஏவுகணை 2.5 மாக் […]
ஏவுகணை சோதனையின் போது ஏவுகணை கப்பல் ஒன்றை துல்லியமாக தாக்கி அழிக்கும் வீடியோவை இந்திய கடற்படை தற்போது வெளியிட்டுள்ளது. இந்திய மற்றும் சீன எல்லையில் கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது.அவ்வபோது பாகிஸ்தானும் குடைச்சல் கொடுத்து வரும் சூழலில், இந்தியா தொடர்ந்து பல்வேறு ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, அரபிக்கடலில் சமீபத்தில் கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பான வீடியோவை இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் […]
பாகிஸ்தான் கடற்படை எந்தவொரு நிலையிலும் தாய்நாட்டையும், அதன் நீர் எல்லைகளையும் பாதுகாக்கும் என கடற்படை தளபதி ஜாபர் மஹ்மூத் அப்பாசி தெரிவித்துள்ளனர். உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானில் தீவிரமடைந்து வருகிறது. அங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,723 ஆகவும், 269 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் அரசு, தற்போது ஊரடங்கால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார […]
ஆட்கொல்லி கொரோனா வைரஸ் பாதிப்பால் பல நாடுகள் அச்சத்தில் உள்ளனர். சீனாவிற்கு அடுத்ததாக ஜப்பான் ,தென்கொரியாவை தான் கொரோனா வைரஸ் அதிகமாக தாக்கி உள்ளது. இந்நிலையில் வடகொரியா ஒரு வார இடைவெளியில் இரண்டாவது முறையாக ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. வடகொரியாவின் ஹாம்யோங் மாகாணத்தில் உள்ள சோன்டாக் இடத்திலிருந்து 3 ஏவுகணைகள் அடுத்தடுத்து ஏவப்பட்டது. இதனை உறுதி செய்துள்ள தென்கொரிய ராணுவம் ஏவுகணை சோதனை செய்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது. அண்டை நாடான ஜப்பான் , தென்கொரியா ஏவுகணை சோதனை செய்ததால் […]