இந்திய கடற்படை உள்நாட்டிலேயே தயாரித்த சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த சோதனையை இந்திய கடற்படை நடத்தியது. இது தொடர்பாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளரின் அதிகாரபூர்வ ‘X’ பக்கத்தில் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய கடற்படை மற்றும் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் இணைந்து உள்நாட்டில் தயாரித்த சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை, இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் சோதனையை இன்று வெற்றிகரமாக மேற்கொண்டது. குடியரசு தினம் […]
அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுவதற்காகவே ஏவுகணை சோதனை நடத்த வடகொரியா அதிபர் கிம் உத்தரவு என தகவல். நேற்று முன்தினம் வடகொரியா கிழக்கு கடற்பகுதியில் அதிவேக ஏவுகணை சோதனை ஒன்றை அந்நாட்டு அரசு நடத்தியது. இந்த சோதனை கொரிய தீபகற்பம், பிராந்தியம் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது என்று தென்கொரியா விமர்சித்திருந்தது. வடகொரிய அதிபர் கிம்மின் உத்தரவின்படி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. ஹ்வாசாங்-17 என்று பெயரிடப்பட்ட அந்த ஏவுகணை வெற்றிகரமாக […]
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்தது. பாகிஸ்தானில் விழுந்த ஏவுகணை தற்செயலாக வீசப்பட்டதாகவும், வழக்கமான பராமரிப்பின்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் நடந்ததாக இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பாகிஸ்தானில் விழுந்த ஏவுகணை குறித்து மாநிலங்களவையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் விளக்கமளித்தார். அதில், கடந்த 9ஆம் தேதி ராஜஸ்தானில் நிலைநிறுத்தப்பட்ட ஏவுகணை வழக்கமான பராமரிப்பு மற்றும் ஆய்வின் போது காலை 7 மணியளவில் ஒரு ஏவுகணை தவறுதலாக சீறிப்பாய்ந்தது. அந்த ஏவுகணை பாகிஸ்தானின் […]
வடகொரியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணை சோதனை அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. வடகொரியா நீண்ட தூரம் பயணம் செய்யும் ஏவுகணையை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெற்றிகரமாக ஏவி பரிசோதனை செய்துள்ளது. இந்த பரிசோதனை வார இறுதியில் மேற்கொள்ளப்பட்டதாக வட கொரிய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த சோதனை ஏவுகணை தண்ணீருக்கு மேல் 1500 கிலோமீட்டர் பயணம் செய்ததாகவும், இந்த ஏவுகணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மூல ஆயுதம் எனவும், இது […]
இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட இலகுரக பீரங்கி எதிர்ப்பு சோதனை வெற்றியடைந்துள்ளது. ஒடிசா கடற்கரையில் இன்று சோதிக்கப்பட்ட ஏவுகணை எடைகுறைந்த ராணுவ டேங்கர்களை தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வான் இலக்கை தரையிலிருந்து தாக்கக்கூடிய இந்த ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையில் அதிநவீனமாக உள்ள மினியேட்டரைஸ் அகச்சிவப்பு இமேஜிங் சீக்கருடன் மேம்பட்ட ஏவியோனிக்ஸ் உடன் […]
ரஷ்யாவில் ஹைபர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடற்படை கப்பலில் இருந்து வெண்கடலில் அதிநவீன ஏவுகணையான ஷிர்கான் ஹைபேர்சோனிக் ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது. 350 கி.மீ. தொலைவில் தரையில் உள்ள இலக்கில் இந்த ஏவுகணை சரியாக சென்றடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹைபேர்சோனிக் ஏவுகணையான ஷிர்கான் ஏவுகணை ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லக்கூடியது. இது 1000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் உடையது. இது குறித்து […]
450 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனையில் தோல்வி அடைந்துள்ளது. அதனது இலக்கை தவறி கடலில் விழுந்துள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோரில் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை நடைபெற்றுள்ளது. அப்போது அதன் இலக்கை எட்டாமல் ஏவுகணை செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே கடலில் விழுந்துள்ளது. இந்த ஏவுகணை 450 கி.மீ இலக்கை தாக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதன் தோல்வி குறித்த காரணம் விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ […]
அக்னி ரக ஏவுகணைகளின் புதிய வகையான அக்னி பி ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. புதிய ரக அக்னி ஏவுகணையான அக்னி பி அல்லது அக்னி பிரைம் ஏவுகணை சோதனையை இந்தியா ஒடிசாவின் கடற்கரை பகுதியில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் ஏவுகணை தளத்தில் வைத்து டிஆர்டிஓ மூலம் இந்த சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இந்த ஏவுகணை முழுவதும் காம்போசைட் மெடீரியல் மூலமாக உருவாக்கப்பட்டது. திட்டமிட்டபடியே இந்த ஏவுகணை மிக […]
பிரமோஸ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் சோனிக் பிரமோஸ் ஏவுகனை சோதனை அரபிக்கடலில், கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலில் இருந்து சோதனை செய்யப்பட்டது.இச்சோதனையில் பிரமோஸ் குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்து நொறுக்கியதன் மூலம் சோதனை வெற்றிப்பெற்றுள்ளது.