நடிகையும், மாடல் அழகியான மீரா மிதுன் கடந்த 2016-ம் ஆண்டில் மிஸ் தென் இந்தியா பட்டம் பெற்றார். இந்நிலையில், இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, அவர் தனியாக அழகி போட்டி நடத்த அனுமதி பெற்றிருப்பதாகவும், தொழில் போட்டியால் சிலர் இதனை தடுக்க முயற்சிப்பதாகவும் போலீசில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து மிஸ் தென் இந்தியா அமைப்பு தாங்கள் கொடுத்த பட்டத்தை தவறான முறையில் பயன்படுத்துவதாக கூறி, அப்பட்டதை பறித்துள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.