மிசோரத்தை தொடர்ந்து நாகலாந்தில் நிலநடுக்கம். இன்று அதிகாலை நாகலாந்து மாநிலத்தின் வோகா பகுதியில் இருந்து, வடமேற்கு திசையில் 9கி.மீ தொலைவில், மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில், 3.8 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மிசோரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், தற்போது நாகலாந்தில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் அங்குள்ள மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.