பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த ஆண்டு ஓமானில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான அணி அறிவிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. […]
நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் தொடர் உடன் வெளியேறியது. இதனால் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். புதிய பயிற்சியாளர் தேடும் வேட்டையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் புதிய பயிற்சியாளராக தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் பாகிஸ்தான் அணிக்கு அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளை தேடித் தந்துள்ளார். இந்நிலையில் […]