வாழ்வில் நாம் நினைத்ததை எளிதில் அடைந்து விட முடியாது. அதற்கு நமது உடலும், மனதும் ஆரோக்கியமாக வைத்திருத்தல் மிக அவசியமாகும். உடல் வலிமையையும், மன வலிமையையும் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும். அதற்க்கு காலையில் இந்த 6 விஷயங்களை பின்பற்றினாலே போதும். முதல் விஷயம் காலையில் எழுந்ததும் அமைதியாக இருக்க வேண்டும். இந்த இடத்தில அமைதி என்பது யாருடனும் பேசாமல், பேப்பர் படிப்பதோ, போன் உபயோகப்படுத்துவதோ இல்லை. மாறாக, தியானம் செய்ய வேண்டும், அல்லது கடவுளை வணங்க வேண்டும். […]