IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் – உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில் பணிபுரிய தகுதி உள்ள 660 பேருக்கான தேடலில் இருந்து வருகின்றனர். டிப்ளமோ, டிகிரி முடித்து விட்டு உளவுத்துறையில் ஆர்வமுள்ள பட்டதாரிகள் இந்த வேலைக்கு ஏதுவாக இருப்பீர்கள். மத்திய அரசின் கீழ் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை தேவையான ஆவணங்களுடன் கொடுக்கப்பட்ட முகவரிக்கு சரியாகசமர்ப்பிக்க வேண்டும். தற்போது இந்த […]
இந்திய மாணவர்கள் இஸ்லாமிய இயக்கத்துக்கு (SIMI) விதிக்கப்பட்ட தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். இந்திய மாணவர்கள் இஸ்லாமிய இயக்கத்துக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும், நாட்டுக்கு எதிரான சதிச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டப்பட்டது. இதன்காரணமாக இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் (சிமி) முதன்முதலில் பிப்ரவரி 1, 2014 அன்று இந்திய அரசால் தடை செய்யப்பட்டது. உத்தரப் பிரதேசம், கேரளா, டெல்லி, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், […]
ஆன்லைன் கேமிங்கில் ஈடுபடும் போது பாதுகாப்பாக செயல்படுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மை காலமாக ஆன்லைன் கேமிங் பயன்பாடுகள் மூலம் மோசடிகள் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் கேமிங் விளையாடுபவர்கள் தவறான முறையில் கையாளுதல், தகவல் பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பற்றை ஆப்ஸ்களை பயன்படுத்துவதால் நிதி மோசடியில் சிக்கிக்கொள்கின்றனர். இதுபோன்று ஆன்லைன் கேமிங்கில் கவன குறைவால் பலர் தங்களது பணத்தினை இழந்துள்ள செய்திகள் நிறைய உள்ளது. இதனால், கேமிங் பயன்பாடுகள் மூலம் மோசடிகளை தடுப்பதற்கு […]
அல்உமர்-முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனரும் தலைமைத் தளபதியுமான முஷ்டாக் அகமது சர்காரை பயங்கரவாதியாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. முஷ்டாக் சர்கார்,அல்கொய்தா மற்றும் ஜெய்ஷ்-முகமது போன்ற தீவிர பயங்கரவாத குழுக்களின் தொடர்புகள் மற்றும் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளார் என்று கூறி சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967ன் கீழ் இந்த அறிவிப்பை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, அவர் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை வளர்க்க பாகிஸ்தானில் இருந்து இடைவிடாத பிரச்சாரத்தை […]
டெல்லி:கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் எண்ணிக்கை குறித்து ராஜ்யசபாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய். 2017 முதல் 2022 மார்ச் 30 வரை பல்வேறு பிரிவுகளின் கீழ் 22 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நித்யானந்த் ராய் புதன்கிழமை ராஜ்யசபாவில் தெரிவித்தார். உத்தரபிரதேசத்தில் தப்பியோடியதாக அறிவிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை குறித்து கேட்டதற்கு, […]
2015 முதல் 2019 வரையிலான ஐந்து ஆண்டுகளில் 6,76,074 இந்தியர்கள் தங்கள் இந்திய குடியுரிமையை கைவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் உள்துறை அமைச்சகம் இந்த தகவலை சிவகங்கையை சேர்ந்த காங்கிரஸ் மக்களவை எம்.பி., கார்த்தி சிதம்பரம் முன்வைத்த கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. 2015 முதல் 2019 வரையிலான ஐந்து ஆண்டுகளில் தங்கள் இந்திய குடியுரிமையை விட்டுக்கொடுப்பவர்களின் எண்ணிக்கை 1,41,656; 1,44942; 1,27,905; 1,25,130; மற்றும் முறையே 1,36,441.ஐந்து ஆண்டுகளில் 6,76,074 இந்தியர்கள் தங்கள் இந்திய […]
இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 2000 குரூப்-சி பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள குரூப்-சி பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தின் கீழ் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நபர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம்: இந்திய உளவுத்துறை காலியிடங்கள்: 2000 பணி: Assistant Central […]
சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் கொரோனா காலத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான வழிகாட்டுதல்கள்களை வெளியிட்டுள்ளது. டெல்லியில் சுதந்திர தின கொண்டாட்டம் எப்படி நடத்தப்படும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது . சுதந்திர தின நிகழ்ச்சியின் போது சரியான சமூக இடைவெளி கடைபிடிப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் .அனைவரும் முகக் கவசம் […]
ராஜீவ் காந்தி அறக்கட்டளை உள்பட 3 அமைப்புகள் பெற்ற நிதிகள் குறித்து விசாரிக்க உள்ளது மத்திய அரசு. இந்தியா மற்றும் சீனா இடையே லடாக்கில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தான் ,சோனியா காந்தி தலைவராக இருக்கின்ற ராஜிவ் காந்தி அறக்கட்டளை சீனாவிடம் இருந்து நிதியுதவி பெற்றதாக பாஜக தேசிய தலைவர் நட்டா கூறினார் . நட்டாவின் கருத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் […]
வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. உலக முழுவவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் விமான போக்குவரத்து முடக்கப்பட்டது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தாயகம் திருப்புவதில் சிக்கல் நிலவி வந்தது. இதனிடையே, வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்துவரப்பட்டன. இந்நிலையில், இந்திய அடையாள அட்டை வைத்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் அவசர தேவைக்கு தாயகம் திரும்ப அனுமதி […]
நான்காவது கட்ட ஊரடங்கின் புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டு மக்களிடையே உரையாற்றிய போது பிரதமர் மோடி நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்தார். இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் இதற்கான அறிவிப்பு விரையில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, 3-ம் கட்ட ஊரடங்கு இன்று இரவுடன் முடிவடையும் இருக்கும் நிலையில் மே 31 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று மத்திய […]
ஊரடங்கு குறித்து மே 4-ம் தேதி முதல் புதிய வழிகாட்டுதல் நடைமுறைகள் வெளியிடப்படும் என்று உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ட்விட்டரில் ட்விட். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 36 நாட்கள் ஆகியுள்ள நிலையில், கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதனால், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதையெடுத்து, ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா.? அல்லது சில தளர்வுகள் இருக்குமா ? என்று மக்கள் மத்தியில் […]
அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்து இருப்பதற்கு இதுவரை வழங்கிய அனுமதியை இன்னும் நீட்டிப்பு செய்துள்ளது மத்திய அரசு. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதுவும், கடைகளை திறக்க நேரம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த நிலையில் தற்போது மத்திய அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்து […]
கொரோனாவை பேரிடராக அறிவித்துள்ளது மத்திய அரசு. உலகத்தையே அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா தற்போது இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சம் காரணமாக மத்திய , மாநில அரசுகள் பல தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 80-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு மாநிலமாக கொரோனா பரவுவதையடுத்து பேரிடராக அறிவித்துள்ளது மத்திய அரசு.மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவுகளை மாநில அரசே நிர்ணயிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.