மாநிலங்களுக்கு உள்கட்டமைப்புகளை உருவாக்குதல், வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி, முக்கிய திட்டங்களுக்கு செலவிடுதல் போன்றவற்றுக்கு மத்திய அரசு நிதி வழங்குகிறது. ஒரு நிதியாண்டில் மத்திய அரசு வசூலிக்கும் வரியில் 41 சதவீதத்தை மாநிலங்களுக்கு 14 தவணைகளில் பகிர்ந்தளிக்கப்படுகிறது. 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டின்படி 15-வது நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி, இந்த ஆண்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.10.21 லட்சம் கோடியை விடுவிக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கான வரி ரூ.72,961.21 கோடியை நவம்பர் 10-ஆம் […]
தமிழகம்:உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதார திட்டங்களுக்காக மத்திய நிதி அமைச்சகமானது, தமிழகத்துக்கு ரூ.805 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பதினைந்தாவது நிதிக் குழு (FC-XV) 2021-22 முதல் 2025-26 வரையிலான தனது அறிக்கையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொத்தம் ரூ.4,27,911 கோடி மானியம் வழங்கப் பரிந்துரைத்துள்ளது. ஆணையம் பரிந்துரைத்த மானியங்களில் ரூ.70,051 கோடி சுகாதார மானியங்களும் அடங்கும். இந்த தொகையில் ரூ.43,928 கோடி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், ரூ.26,123 கோடி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,19 மாநிலங்களின் ஊரக […]
ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக தமிழகத்துக்கு ரூ.1314.4277 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக ரூ.17,000 கோடியை விடுவித்துள்ளது.அதன்படி, தமிழகத்துக்கு ரூ.1314.4277 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக, மகாராஷ்டிரா மாநிலத்துக்கு ரூ.3053.5959 கோடியும், கர்நாடகா மாநிலத்துக்கு ரூ.1602.6152 கோடியும் மத்திய அரசு விடுவித்துள்ளது. மேலும்,குஜராத்துக்கு ரூ.1428.4106 கோடி,கேரளாவுக்கு ரூ.673.8487 கோடி என பிற மாநிலங்களுக்கும் ஜிஎஸ்டி இழப்பீடாக மத்திய அரசு நிதி விடுவித்துள்ளது. 2021-22 ஆம் […]
கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தம் காரணமாக மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையில் ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதை, ஈடுகட்ட மாநில அரசுகளுக்கு இரு வாய்ப்புகளை வழங்கப்பட்டது. அதில், ஓன்று ரூ.97 ஆயிரம் கோடி ரிசர்வ் வங்கியிடம், குறைந்த வட்டியில் கடன் பெற்றுக்கொள்ளலாம். ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இதை மாநில அரசுகள் திருப்பிச் செலுத்த முடியும். அல்லது வெளிச்சந்தையில் ரூ.2 லட்சத்து […]
நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாயாக 86ஆயிரத்து 449 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் சரக்கு சேவை வரி விதிப்பு முறையை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்தாண்டு கொரோனா வைரஸ் காரணமாக பொது முடக்கம் விடுத்துள்ளதை அடுத்து அரசு பல்வேறு வகையில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. அனைத்து மத்திய, மாநில அரசுகளும் வருவாய் இல்லாமல் நிதி நெருக்கடியால் தவித்து வருகின்றனர். […]
ஜூலையில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் 87,422 கோடி என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொத்தமாக ஜூலை மாதத்தில் 87,422 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், மத்திய ஜிஎஸ்டி 16,147 கோடியும், மாநில ஜிஎஸ்டி 21,418 கோடியும், ஐஜிஎஸ்டி 42,592 கோடி (பொருட்கள் இறக்குமதி மூலம் பெறப்பட்ட வருவாய் 20,324 கோடி) மற்றும் செஸ் 7,265 கோடி (பொருட்கள் இறக்குமதி மூலம் பெறப்பட்ட வருவாய் 807 கோடி) என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த […]
புதிய திட்ட அனுமதி, நிதி ஒதுக்கீடு போன்றவை செய்ய கூடாது என பல துறைகளுக்கு நிதி அமைச்சகம் ஆணை. செலவை கட்டுப்படுத்த புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கூடாது என்று மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. புதிய திட்ட அனுமதி, நிதி ஒதுக்கீடு போன்றவை செய்ய கூடாது என பல துறைகளுக்கு நிதி அமைச்சகம் ஆணையிட்டுள்ளது. பிரதமரின் கரிப்கல்யாண் யோஜனா திட்டம் மற்றும் ஆத்மநிர்பர் பாரத் திட்டம் ஆகியவற்றை தவிர புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு […]
மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார்.இந்த முறை நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து 17வது மக்களவையின் முதல் பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு கடைசியாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தது.ஜூலை 5ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிலையில்,மத்திய நிதி அமைச்சகம் இது தொடர்பாக சுற்றறிக்கை […]