புதிய விமான நிலையம் அமையும் பட்சத்தில் இரண்டாம் தொழிற்புரட்சி ஏற்படும் என அமைச்சர் தகவல். சென்னையின் 2 வது விமான நிலையம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமையும் பட்சத்தில் ஸ்ரீபெரம்பத்தூர் பகுதியில் இரண்டாம் தொழிற்புரட்சி ஏற்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க தற்போது 4,000 ஏக்கர் நிலம் தயாராக உள்ளது என்றும் விமான […]
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து முதலீட்டாளர்களை ஈர்க்க ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு’ என்ற பெயரில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னையில் இன்று காலை 10 மணிக்கு தொழில் முதலீட்டாளர் மாநாடு நடைபெறவுள்ளது. இதில்,தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,தொழில்துறை செயலர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.அப்போது,முதல்வர் முன்னிலையில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,இந்த மாநாடு மூலமாக ரூ.70 ஆயிரம் கோடி முதலீடுகளை […]
ஸ்டாலின் என்ற பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும் என அண்ணாமலை ட்வீட். சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ‘எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே’ என்றும், ‘தமிழ்த்தாய்’ எனவும் என குறிப்பிட்டு ஓவியம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். இதனை விமர்சனம் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் […]
தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்ற நிலையில், எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்துள்ளனர்.அந்த வகையில்,மதுரை மாவட்டத்தின் மெரினாவாக இருக்கும் மாரியம்மன் கோயில் தெப்பகுளத்தில் லேசர் ஷோ நடத்தினால் மிகவும் நன்றாக இருக்கும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ கூறினார்.இதற்கு பதிலளித்த சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள்,தங்களது கோரிக்கை குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என்று […]
ஆளுநர் மாளிகையில் நடக்கும் விழாவையும் தமிழக அரசு புறக்கணிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு. தமிழ் புத்தாண்டையொட்டி ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெறும் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்என் ரவி அழைப்பு விடுத்திருந்தார். ஆளுநர் தேநீர் விருந்தை, சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அக்கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்திருந்தனர். இருப்பினும் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. இந்த சமயத்தில் இன்று ஆளுநர் […]
முதலமைச்சர் ஸ்டாலினின் டெல்லி பயணத்தை அவதூறாக பேசக்கூடாது என அமைச்சர் தங்கம் தென்னரசு பதில். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒட்டுமொத்த தமிழக நலனுக்கான கோரிக்கையாகவே பிரதமர் மோடி, மத்திய அமச்சர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தபோதும் தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகளை முதல்வர் வலியுறுத்தினார். பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் கம்பீரமாக சந்தித்து பேசினார். முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைத்த வரவேற்பால் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது. தன்னை […]
வேளாண் சட்ட எதிர்ப்பு தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காதது துரோகம் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் இந்திய முழுவதும் இருக்கும் விவசாயிகளுக்கு எதிரான சட்டம். இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று. இன்று சட்டப்பேரவையில், வேளாண் சட்ட எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிக்காமல் அதிமுக வெளிநடப்பு செய்ததன் மூலம் துரோகம் இழைத்துள்ளது. […]
கோடநாடு குறித்து முதலில் சட்டப்பேரவையில் பேசியது அதிமுகதான் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலில் பேசியது அதிமுகதான். தற்போது கோடநாடு பற்றி பேசக்கூடாது என்றால், சட்டப்பேரவைக்கு ஏன்? கொண்டு வந்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சட்டப்பேரவையில் பேச கூடாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவது வேடிக்கையாக உள்ளது என்றும் […]
தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தனி அமைப்பாக செயல்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன், செம்மொழித் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், கர்நாடக மாநிலத்துக்குச் செல்ல உள்ளதாகவும், அதனைத் தமிழகத்திலேயே இருக்கச் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த தமிழ் ஆட்சிமொழித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செம்மொழித் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தனி அமைப்பாகச் […]
தமிழின் தொன்மையை கண்டு சிலருக்கு வயிறு எரிவதால் அகழாய்வுகள் தேவையற்றது என எழுதிக்கிறார்கள் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கீழடி உள்ளிட்ட அகழாய்வில் தமிழின் தொன்மையை நிரூபிக்கும் வகையில் சான்றுகள் கிடைத்து வருகின்றன. 2 நாட்களுக்கு முன்பு கீழடியில் 146 செமீ பூமிக்கு அடியில் வெள்ளியிலான முத்திரை பதித்த காசு கிடைத்துள்ளது. […]