அறிவிக்கும் முன் யோசிப்பதில்லையா என அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள உதவியாளர், வயர்மேன் பணியிடங்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் ஆட்கள் நியமிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு திமுக உள்ளிட்ட பல எதிர்ப்புகள் வந்ததை தொடர்ந்து, தனியார் நிறுவனம் மூலம் மின்வாரியத்துக்கு 30 ஆயிரம் பேரை தேர்வு செய்யும் ஆணை ரத்து என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்திருந்தார். இதையடுத்து, திடக்கழிவு மேலாண்மை […]
தடையில்லா மின்சாரம் வழங்கவே தனியார் மூலம் பணியாட்கள் தேர்வு – மின்வாரிய பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கும் தமிழக அரசின் முடிவு குறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவியாளர், வயர்மேன் பணியிடங்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் ஆட்கள் நியமனம் செய்யப்படும் என்றும் 12,000 இடங்கள் தனியாருக்கு செல்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டது. ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுபவர்கள் 3 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். அரசின் தனியார்மய நடவடிக்கையால் இனி ஐ.டி.ஐ படித்தவர்கள் நேரடியாக மின்வாரியத்தின் வயர்மேன் […]
மின் வாரியத்தில் உதவி பொறியாளர், தொழில்நுட்ப பணியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப ஜனவரி முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமரபாளையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மின் வாரியத்தில் உதவி பொறியாளர், தொழில்நுட்ப பணியாளர், ஆகிய பணியிடங்களை நிரப்ப ஜனவரி மாதம் முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிந்தவுடன் 10,000 பணியிடங்கள் நிரப்படும் என்றும் கூறியுள்ளார். […]
மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பி சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மின் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வசூலிப்பதாக பல புகார்கள் எழுந்தது.இதையடுத்து, மின்சாரா வாரியம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் , ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே இருந்ததால் மின்கட்டணம் உயர்ந்துள்ளது என்றும் பயன்படுத்தப்பட்ட மின்சாரம் யூனிட் அடிப்படையில் கட்டணம் கணக்கிட முடியாது, பழைய மின் கட்டண தொகையை அடிப்படையாக கொண்டே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படும் என மின்சார வாரியம் விளக்கம் கொடுத்தது. இதனிடையே […]
அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட ஐவர் குழு நேற்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் கட்சி பணிகள் குறித்த ஆலோசனை நடைபெறுவது வழக்கம்.கட்சி மற்றும் மாவட்ட செயலாளர்கள் குறித்து வரும் புகார்கள் குறித்து விசாரிக்க அதிமுக சார்பில் ஐவர் குழு ஓன்று அமைக்கப்பட்டது.இந்த குழுவில் அமைச்சர்கள் தங்கமணி , வேலுமணி ,கே.பி.முனுசாமி , நத்தம் விஸ்வநாதன் ,வைத்திலிங்கம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது.இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது. இந்த […]
விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மின் மோட்டார்களில் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி தற்போதைக்கு நிறுத்தபடுவதாக அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார். தமிழகத்தில் சில இடங்களில் விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பம்பு செட் மோட்டார்களில் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வந்தன. இதனால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், தற்போது விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மின் மோட்டார்களில் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி தற்போதைக்கு நிறுத்தபடுவதாக அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளாராம். இதனால் விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார் . இந்தியா முழுவதும் கொரோனா பரவல் காரணமாக முதலில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன் பின்னர் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதன் விளைவாக நாடு முழுவதும் அனைத்து தொழில்களும் முடங்கியது.மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளே முடங்கி உள்ளனர். இந்நிலையில் அமைச்சர் தங்கமணி கூறுகையில், கோடைகாலத்தில் மின்வெட்டு ஏற்படாமல் இருக்கும் அளவுக்கு மின்உற்பத்தி உள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது.இன்று முதல் […]
மின் விளக்குகளை அணைத்தாலும் மற்ற மின் சாதனங்களை இயக்கலாம் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கொரோனா நோய்க்கு எதிராக நாம் ஒற்றுமையாக இருப்பதை இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து தீபம், மெழுவர்த்தி ஏற்றி ஒளிர விட வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். எனவே தமிழக மின்சார வாரியம் ஒரே நேரத்தில் மாநிலம் முழுவதும் மின்சாரம் பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு […]
மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழக அரசுக்கு அதிக வருவாயை அரசு மதுபான கடைகள் தான் ஈட்டித் தருகிறது .இந்த மதுபான கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என்று பொதுமக்களால் போராட்டங்கள் இன்றளவும் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.நிர்ணயிக்கப்பட்ட விலையை விட இனிமேல் பீரின் விலை ரூ.10, ஒரு ஆஃப் விலை ரூ.20க்கு,ஒரு குவார்ட்டரின் […]
இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது கோவையில் புதைவட கேபிள் பதிக்கும் பணிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, சென்னையில் இந்த பணி ஏற்கனவே நடைபெறுவதாகவும் , ஈரோட்டில் தற்போது துவங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.புதைவட கேபிள் பதிக்கும் பணி அனைத்து மாநகராட்சிகளிலும் நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.