அவசியம் இருந்தால் மட்டுமே சிசேரியன் முறையில் குழந்தை பெற வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு பிரசவம் இரண்டு முறைகளில் நடக்கிறது. ஒன்று இயற்கையான முறையில் பிரசவம், மற்றொன்று அறுவை சிகிச்சை முறையில் பிரசவம். ஆனால் தற்போது பல பெண்கள் தாங்கள் விருப்பப்பட்ட தேதியில், விருப்பப்பட்ட நேரத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, சிசேரியன் முறையை மேற்கொள்கின்றனர். ஆனால், இவ்வாறு செய்வது முற்றிலும் தவறான ஓன்று. இதுகுறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் கூறுகையில், […]