அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விவகாரத்தை பெரிதுப்படுத்துவது வேதனை அளிக்கிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நீலகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். அந்த சமயத்தில் அங்கிருந்த சிறுவர்களை அமைச்சர் சீனிவாசன் , “டேய் ,வாடா வாடா செருப்பை கழற்றுடா,” என்று அழைக்கவே உடனே அங்கே வந்த இரண்டு சிறுவர்களில் ஒருவன் அமைச்சரின் செருப்பை கழற்றிவிட்டான்.பின்னர் அமைச்சர் அருகில் இருந்த உதவியாளர் செருப்பை எடுத்து ஓரமாக வைத்தார்.அமைச்சருடன் நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் […]