சென்னையில் நேற்று மாநகர பேருந்து ஒன்று, திருவேர்காட்டில் இருந்து வள்ளலார் நகருக்கு சென்று கொண்டிருந்தது, அப்பொழுது அம்ஜிக்கரை பகுதியை பேருந்து நெருங்கியபோது பேருந்தில் பயணித்த 27 வயதுடைய பெண் பேருந்து இருக்கைக்கு அடியில் இருந்த பலகை திடீரென விலகி அதில் தவறி விழுந்தார். ஊட்டி : கட்டுமான பணியின் போது மண்சரிவு.! 7 பேர் உயிரிழப்பு.! அப்போது அவருடன் பயணம் செய்த சகப்பயணிகள் கூச்சலிட்டதால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். இதில் சிறு காயங்களுடன் தப்பித்த அந்த பெண்மணியை […]
வரும் நவம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொதுவாகவே விடுமுறை தினத்தை முன்னிட்டு வெளியூரில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சொந்த ஊர் திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதே போல இந்தாண்டு தீபாவளி விடுமுறையை முன்னிட்டு நவம்பர் 9ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். சென்னையில் இருந்து மட்டும் 10,975 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும், மற்ற ஊர்களில் இருந்து […]
தமிழக அரசு பேருந்து கட்டணம் உயர்வு குறித்து உலா வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அமைச்சர் அறிவிப்பு. தமிழக அரசின் போக்குவரத்துக்கு கழகம் பேருந்துகளில் பயணசீட்டு கட்டணம் உயர்த்தப்படவில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து வதந்திகள் உலவி வருகின்றன. கட்டண உயர்வு குறித்து அட்டவணை தயாராகி விட்டதாக இன்று செய்திகள் பரப்பப்படுகின்றன. அது குறித்து […]
தொலைதூர பேரூந்துகளுக்கான கட்டண உயர்வு பட்டியல் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அறிவிப்பு. பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், தொலைதூர பயண பேருந்து கட்டண உயர்வு பட்டியல் அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அரசு பேருந்துகளில் உள்ள தொலைதூர பயண பேருந்து கட்டண விகிதத்தை ஆராய்ந்து, அதற்கு ஏற்ப பட்டியல் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும், அரசு பேருந்து கட்டண உயர்வு குறித்து இதுவரை […]
நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னையில் சிசிடிவி கேமரா, அவசர அழைப்பு பட்டன் வசதி கூடிய 500 பேருந்துகளின் சேவை தொடக்கம். நிர்பயா பாதுகாப்பு நகர திட்டத்தின் கீழ் மாநகர போக்குக்குவரது கழகங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 500 பேருந்துகளில் சிசிடிவி கேமரா, அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு வசதியுடன் கூடிய 500 பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொளி […]
பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு. அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பள்ளி, கல்லூரி வாகனத்தில் கேமரா கட்டாயம் பொருத்தப்படும் என்றும் பள்ளி, கல்லூரி வாகனத்தில் கேமரா பொருத்துவதற்கான ஆய்வும் கூடிய விரைவில் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், பள்ளி, […]
பேருந்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர்கள் விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி இருக்கை பெற்றுக்கொள்ளலாம் என போக்குவரத்துத்துறை அறிவிப்பு. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இனிமேல் டிக்கெட் இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கடந்த சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்த நிலையில், பேருந்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் பெற்றோர்கள் விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி இருக்கை பெற்றுக்கொள்ளலாம் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக […]
அரசுப்பள்ளி மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என பேரவையில் அமைச்சர் அறிவிப்பு. அரசுப் பள்ளி மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்ட வழித் தடங்களை ஆராய்ந்து, மீண்டும் பேருந்து போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தனியார் மின் பேருந்து பிரச்சனைக்கு பேரவை தொடருக்கு பின் உரிமையாளர்களை அழைத்து தீர்வு காணப்படும் என்றும் கூறினார் […]
பேருந்துகளில் ஒலிபெருக்கி அமைக்க திட்டமிட்டு வருவதாக அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு. தமிழகத்தில் பேருந்துகளில் அடுத்து வரும் நிறுத்தம் குறித்த அறிவிப்பை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் முதற்கட்டமாக 500 மாநகர பேருந்துகளில் ஒலிபெருக்கி அமைக்கப்படும் எனவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு பேருந்துகளில் கேமரா பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்து வரும் பஸ் ஸ்டாப்புகள் குறித்து அறிவிக்க […]