மின் இணைப்பை ஆதாருடன் இணைக்க கால அவகாசத்தை நீட்டித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், மேலும் அவகாசம் நீட்டிக்கப்படுமா என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், மின் இணைப்பை ஆதாருடன் இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜனவரி 31-ஆம் தேதி ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கலாம் என அறிவித்துள்ளார். ஜனவரி […]
மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் கை கடிகாரம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ரூ.5 லட்சம் மதிப்பு என்று கூறப்படும் கை கடிகாரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அந்த கடிகாரத்தின் ரசீது கேட்டு திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தான் வாங்கிய கை கடிகாரத்திற்கான ரசீதை வெளியிட வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று தெரிவித்திருந்தார். எந்த கடையில் வாங்கப்பட்டது, […]
முடிஞ்சா அந்த ‘நபர்’ அந்த கடிகாரத்திற்கான ரசீதை இன்னைக்கு மாலைக்குள்ள வெளியிடனும் என அமைச்சர் கேடு. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கை கடிகாரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அந்த கை கடிகாரத்தின் விலை ரூ.5 லட்சம் என்பதால் பல்வேறு கேள்விகள் அண்ணாமலையிடம் வைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கை கடிகாரம் வாங்கிய ரசீதை வெளியிட அண்ணாமலை தயங்குகிறார் என திமுக மாணவரணி தலைவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தான் […]
இதுவரை 34,134 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல். சென்னை அண்ணா சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பொங்கலுக்கு முன் 50000 விவசாயிகளுக்கு முழுமையாக இலவச மின் இணைப்பு வழங்கப்படும். இதுவரை 34,134 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 15,866 விவசாயிகளுக்கு பொங்கலுக்கு முன் மின் இணைப்புகள் முழுமையாக வழங்கப்பட்டு விடும் என்றும் ஒன்றரை ஆண்டுகளில் 1.50 லட்சம் மின் இணைப்பு நிறைவு […]
ஆதார் – மின் இணைப்பு சிறப்பு முகாம்கள் டிச.25-ஆம் தேதி மட்டும் செயல்படாது என அமைச்சர் அறிவிப்பு. சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இதுவரை 1.03 கோடி பேர் இணைத்துள்ளனர். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு டிசம்பர் 31 வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். டிசம்பர் 31க்கு பிறகு அவகாசத்தை நீட்டிப்பது குறித்து முதலமைச்சரிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார். டிசம்பர் 31-க்குள் எவ்வளவு பேர் இணைத்துள்ளனர் […]
ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில், மின்சார வாரியம் முக்கிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. ஆதார் எண்ணை மின் இணைப்புடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என மின்சாரத்துறை அறிவித்திருந்த நிலையில், மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தமிழகம் முழுவதும் நேற்று முதல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு முகாம் டிசம்பர் 31-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தும் மின் அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பலர் தங்களது ஆதார் எண்ணை, […]
ஒருவர் 5 இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் உண்டு என மின்சாரத்துறை தகவல். தமிழகத்தில் 2.33 கோடி பேரில் இதுவரை 15 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். ஒருவர் அதாவது ஒரு ஆதாரில் 5 இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் மின் இணைப்புடன் ஆதார் இணைத்த பிறகு எந்த மாற்றமும் செய்யப்படாது எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இலவசம் மின்சாரம் பெறும் […]
வீடுகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எவ்வித மாற்றமின்றி தொடரும். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதால் இலவசமாக வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் மின்சாரத்தில், எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஆகையால், வீடுகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எவ்வித மாற்றமின்றி தொடரும் என்றும் குடிசை, விவசாய மின் இணைப்புகளுக்கு தரப்படும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் அமைச்சர் செந்தில் […]
அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து கருத்து தெரிவிக்க பாஜக நிர்வாகிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதிப்பு. அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட பாஜக நிர்வாகி நிர்மல்குமாருக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமார் 29-ஆம் தேதிக்குள் பதில் தர ஆணையிடப்பட்டுள்ளது. மதுபான கொள்முதல் தொடர்பாக சமூகவலைத்தில் நிர்மல்குமார் விமர்சித்திருந்தார் என கூறப்படுகிறது. எனவே, பாஜக […]
பத்திரிக்கையாளர்கள் செய்திகள் வெளியிடுவதற்கு முன் அறிவாலயத்தின் அனுமதி பெற வேண்டுமா? என அண்ணாமலை கேள்வி. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பதிவுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர், டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம். இந்த விற்பனையின் மூலமாக தனக்குக் கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்துவிடும் என்று சாராய அமைச்சருக்கு […]
இலவசமாக வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரத்தை வேண்டாம் என நினைப்பவர்கள் விண்ணப்பம் பூர்த்தி செய்து தரலாம் என தகவல். தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி, பயன்படுத்து யூனிட் அடிப்படையில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. இதுகுறித்து அமைச்சர் கூறியதாவது, கடந்த 10 ஆண்டுகளில் மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடி உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் […]
இந்த மின் கட்டண உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை. கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்துள்ளது என்றும் இதன் காரணமாக தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று தெரிவித்திருந்தார். இதற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கண்டங்களை தெரிவித்து, மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அந்தவகையில், தேமுதிக தலைவர் கேப்டன் […]
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிதி நிலைமைக்கு ஏற்ப விரைவில் நிரப்பப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் மின்னகம் நுகர்வோர் சேவை தொடங்கப்பட்டு ஒரு வருடம் நிறைவு பெற்ற நிலையில்,அதனை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து,செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர்: “தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இதுவரை 9.16 லட்சம் புகார்கள் பெறப்பட்டு உள்ளன எனவும்,சென்னையில் தொடங்கப்பட்ட மின்னகம் […]
பாஜக அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கோவை மாவட்டம்,மசக்காளிப்பாளையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன்,பாஜக நிர்வாகிகள்,தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில்,தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள தமிழக அரசு மாறும்போது முதல் நாளே,முதல் ஆளாக தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக,செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: “தமிழக மின்சார […]
தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பு ஆறரை நாட்களுக்குதான் உள்ளது என்றும்,இனி வரும் காலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லாத அளவிற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக,வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கூறுகையில்: “தனியார் கொள்முதல் இல்லாமல் சொந்தமாக 6,220 மெகாவாட் மின் உற்பத்தியை அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவு செய்வதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.நிலக்கரி கையிருப்பு ஆறரை நாட்களுக்கு உள்ளது. எனினும்,137 டாலருக்கு 4 லட்சத்து 80 […]
கோவை கவுண்டன்பாளையம் மேம்பாலத்தை தாங்களே திறக்கப்போவதாக பாஜகவினர் தெரிவித்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை. சட்டத்திற்கு உட்படாமல் ரவுடிகளை போல் யார் செயல்பட்டாலும் அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். கோவை கவுண்டன்பாளையம் மேம்பாலத்தை தாங்களே திறக்கப்போவதாக பாஜகவை சேர்ந்தவர்கள் அறிவித்தது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார். கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், கவுண்டன்பாளையம் மேம்பாலத்தை தாங்களே திறந்து வைத்தால் வழக்குப்பதிவு செய்யப்படும். சட்டத்தை கையில் […]
அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 3 பேருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதிப்பு. சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 3 பேருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட சண்முகம் 9-ஆம் தேதியும், செந்தில் பாலாஜி 13-ஆம் தேதியும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து […]
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு. மின்வெட்டு குறித்து உண்மைக்கு மாறான பொய்யான தகவல்களை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் கூறுகையில், மின்வெட்டு குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களையும், அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும், நேற்று தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக 388.10 மில்லியன் யூனிட் […]
தமிழகத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு. தமிழகத்தில் மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியினை பெருக்கவும், விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும், விவசாயிகளின் நலனை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் மற்றுமொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 […]
திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக என்று சொல்லவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி பதில். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-23-ஆம் ஆண்டிற்கான எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை தொடர்பான கொள்கை விளக்க குறிப்பை அமைச்சர் செந்தில் பாலாஜி வாசித்தார். அதில், 2021-22-ஆம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.36,013.14 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றும் கடந்தாண்டை விட நடப்பாண்டில் […]