பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளை திறப்பதில் தாமதம் செய்ய முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் பூட்டப்பட்ட பள்ளிகள், நாளை முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்திருந்தது. பள்ளிக்கு வரக் கூடிய மாணவர்கள் பெற்றோர்களின் அனுமதி கடிதத்துடன் வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளை திறப்பதில் […]
புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய முதலமைச்சர் விரைவில் குழுவை அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அண்மையில் புதிய கல்விக்கொள்கை குறித்து அறிவித்தது.ஆனால் இந்த அறிவிப்பில் மும்மொழிக் கொள்கை குறித்த அறிவிப்பிற்கு தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இதனால் தமிழக அரசு மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இரு மொழி கல்வி கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார் . இதனிடையே சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது […]
ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்று வெளியான செய்தி தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்று வெளியான செய்தி தவறானது என்றும் தற்போதைய சூழலில் மாணவர் சேர்க்கை நடத்துவது பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் உள்ளது, பொதுத்தேர்வுகள் முடிந்த பின்னரே, புதிய தேதிகள் அறிவிக்கப்படும் […]