ஆளுநருக்கு ‘மீடியா மேனியா’ நோய்..! சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிக்கை

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை ‘மீடியா மேனியா’ நோய் தாக்கியுள்ளது போல தெரிகிறது என தெரிவித்துள்ள அமைச்சர் ரகுபதி, எதிர்க்கட்சியை போல அரசை அவர் விமர்சனம் செய்வது அழகா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளம், தெலங்கானா, தமிழ்நாடு ஆளுநர்களுக்கு இடையே யாருடைய பெயர் ஊடகங்களில் அதிகம் வருகிறது என மறைமுகப் போட்டி நடக்கிறது ஆளுநர் ரவி அவர்களுக்கு ‘மீடியா மேனியா’ நோய் தாக்கியுள்ளதைப் போலத் தெரிகிறது, தினந்தோறும் தன்னைப் … Read more

ஆன்லைன் சூதாட்ட தீர்ப்பு – மேல்முறையீடு செய்ய பரிசீலனை செய்யப்படும் : அமைச்சர் ரகுபதி

ragupathy

சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில அரசுக்கு ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய உரிமை இல்லை எனக் கூறி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. தமிழக அரசு மற்றும் ஆன்லைன் நிறுவனங்கன் என இரு தரப்பினரும் தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து, ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தங்கள் தரப்பு வாதங்களை பதிவு செய்தது. தமிழக அரசு கால அவகாசம் கேட்டிருந்த நிலையில், தமிழக அரசு தரப்பில்  குறிப்பிடுகையில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை … Read more

ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டுவீச்சு.! கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த பாஜக வக்கீல்.?

Karuka Vinoth

நேற்று முன்தினம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முதல் வாசல் முன் பேரிகேட் (தடுப்பு) அருகில் கருக்கா வினோத் எனும் நபர் பெட்ரோல் குண்டு வீசினார். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்து மேலும் இரண்டு பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட கருக்கா வினோத், சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் என்றும், ஏற்கனவே கடந்த வருடம் சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் உள்ளிட்ட … Read more

LeoFDFS: நீதிமன்றம் உத்தரவிட்டால் ‘லியோ’ 4 மணி காட்சி அனுமதிக்கப்படும் – அமைச்சர் ரகுபதி அறிவிப்பு.!

leo vijay

திரைத்துறையில் அரசியல் தலையீடுகள் இல்லை என்றும், லியோ திரைப்பட விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம் என அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார். நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும், காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று மதியம் 1 மணிக்கு நீதிபதி அனிதா சுமந்த் … Read more

மதிப்பெண்கள் தான் மாணவரின் மதிப்பை உயர்த்தும் – அமைச்சர் ரகுபதி

பெண்கள் தான் அதிகளவில் சட்டப்படிப்பு படிக்கின்றார்கள் என காரைக்குடி சட்ட கல்லூரி திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் பேச்சு. காரைக்குடி சட்ட கல்லூரி திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் ரகுபதி, மதிப்பெண்கள் தான் மாணவர்களின் மதிப்பை உயர்த்தும். இல்லையெனில் பெற்றோரின் பர்ஸ் காலியாகிவிடும். பெண்கள் தான் அதிகளவில் சட்டப்படிப்பு படிக்கின்றார்கள். உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளாவும் உள்ளனர். பெண்கள் அதிகளவில் படித்து முன்னேறினால் சமத்துவ நீதி வலுப்பெறும் என்று தெரிவித்தார்.