வரும் 18ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி. நாடாளுமன்ற கூட்டத்தொடரையொட்டி வரும் 18ம் தேதி அனைத்துக்கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. 18ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பங்கேற்க இருக்கின்றனர். இதனிடையே, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எப்படி செயல்படுவது என்பது […]