பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் டிச.31ம் தேதி தொடங்கும் என அமைச்சர் அறிவிப்பு. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்களுக்கு பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் பணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. பொங்கல் பரிசுக்கான டோக்கன் விநியோகம் விரைவில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் […]
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மீதான 3 வழக்குகளை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், தேர்தலின்போது அதிக வாகனங்கள் பயன்படுத்தியது மற்றும் அனுமதியின்றி கட்சி அலுவலகத்தை திறந்தது உள்ளிட்டவை தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பெரியகருப்பன் வழக்கு தொடர்ந்திருந்தார். ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் பங்கேற்றதற்காக அதிமுக ஆட்சியில் உள்நோக்கத்தோடு வழக்கு […]
ஊராட்சிகளிலும் வருங்காலத்தில் உடற்பயிற்சிக் கூடம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என அமச்சர் அறிவிப்பு. அனைத்து ஊராட்சிகளிலும் உடற்பயிற்சி கூடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், சோழிங்கநல்லூர் தொகுதி, புதிய தோமையர் மலை ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் வருங்காலத்தில் உடற்பயிற்சிக் கூடம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்தார். அனைத்து ஊராட்சிகளிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியே உடற்பயிற்சி கூடம் அமைக்க அரசு […]
அமைச்சர் பெரிய கருப்பன் மரியாதை குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதால் வெளிநடப்பு செய்துள்ளோம் என ஓபிஎஸ் பேட்டி. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்து வரக்கூடிய சூழ்நிலையில், இதனை மாநில அரசே நியமிக்கும் சட்டமசோதா இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது தொடர்பாக சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து இந்த மசோதாவிற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், இந்த சட்ட மசோதா […]
பஞ்சாயத்து தலைவர்களின் மாத ஊதியம் ரூ.10,00ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படுகிறது என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், ஊராட்சி மன்ற தலைவர்களின் மாத ஊதியம் ரூ.10,00ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படுகிறது என்று அறிவித்துள்ளார். ஊதிய உயர்வு மூலம் தமிழக்தில் 12,000க்கும் மேற்பட்ட ஊராட்சி தலைவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன் மாதிரி கிராம விருது வழங்கப்படும் என்றும் சிறப்பாக […]
செப்டம்பர் 15ம் தேதிக்குள் மீதமுள்ள பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு. தமிழகத்தில் ஊரகம், நகர்ப்புறம் என 2 வகையான உள்ளாட்சி அமைப்புகளும், அவற்றில் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பதவிகளும் உள்ளன. தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, மீதமுள்ள மாவட்டங்களுக்கு 2019 டிசம்பரில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் 2020 ஜனவரியில் பொறுப்பேற்றனர். வார்டு வரையறை பணிகள் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. […]