பதிவுத்துறை வருவாய் கடந்த ஆண்டை விட இந்தாண்டு இதே நாளில் ரூ.2,325 கோடி அதிகம் என அமைச்சர் மூர்த்தி தகவல். பதிவுத்துறை வருவாய் ரூ.8,000 கோடியை கடந்ததாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இதே நாளில் எட்டப்பட்ட ரூ.5,757 கோடியை விட ரூ.2,325 கோடி அதிகமாகும். பதிவுத்துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கையால் ஆவணங்கள் பதிவு அதிகரித்து அரசுக்கு வரு வருவாய் அதிகரித்துள்ளது. போலி ஆவண பதிவுகளை பதிவுத்துறையே ரத்து செய்யும் […]
சரிவர பணி செய்யாத புகாரில் சென்னை அண்ணாநகர் சார் பதிவாளர் அலுவலக அதிகாரிகள் உள்பட 5 பேர் பணியிட மாற்றம். சென்னை நொளம்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். 50க்கும் மேற்பட்டோர் காத்திருந்த நிலையில், மெத்தனமாக பணி செய்த பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, நொளம்பூர் சார் பதிவாளரை பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டார். இதுபோன்று, சரிவர பணி செய்யாத புகாரில் சென்னை அண்ணாநகர் சார் பதிவாளர் அலுவலக அதிகாரிகள் உள்பட 5 […]
பத்திரபதிவில் முறைகேடு செய்வோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் மசோதா கொண்டுவரப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளன. முறைகேடு நடந்ததற்கான அனைத்து ஆதாரங்களும் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், 2016 முதல் 2021 வரை பத்திரப்பதிவுத் துறையில் வெளிப்படையாகவே முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த […]