ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டாக மாற்ற விரைவில் சட்ட நடவடிக்கை என அமைச்சர் மெய்யநாதன் பேட்டி. புதுக்கோட்டையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் மெய்யநாதன், உலகத்திலேயே இல்லாத அளவிற்கு மதுரையில் மிக பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது. அடுத்தகட்டமாக ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டாக மாற்ற விரைவில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கான நடவடிக்கைகள் முழு வடிவம் பெற்றதுக்கு பின்னர் முதலமைச்சர் முக ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லுவோம். இதன்பின் ஜல்லிக்கட்டை விளையாட்டு போட்டியாக மாற்ற எதிர்காலத்தில் நடவடிக்கை […]
ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி வழங்கப்படாது என்பது உறுதி என்று அமைச்சர் தகவல். கடந்த 2013-ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் பெரியகுடியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக கிணறு தோண்டிய போது பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்திற்கு பிறகு விவசாயிகளின் போராட்டம் காரணமாக கிணறு முற்றிலுமாக மூடப்பட்டது. 2021-ஆம் ஆண்டு மீண்டும் கிணறை செயல்படுத்த ஓஎன்ஜிசி நிறுவனம் முனைப்பு காட்டியபோது தமிழக அரசு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தது. பெருங்குடியில் ஓஎன்ஜிசி […]
WTA எனப்படும் பெண்கள் டென்னிஸ் சங்கம் சார்பில் போட்டி நடத்தப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு. சென்னை நுங்கம்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 26ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை WTA உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது என்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், உலக மகளிர் டென்னிஸ் போட்டித்தொடரை நடத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் […]
விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு. தமிழகத்தில் நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.3,000 லிருந்து ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் சட்டப்பேரவையில் அறிவித்தார். பேரவையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய அமைச்சர், மண்ணை மலடாக்கும் அபாயகரமான எந்த திட்டத்தையும் முதலமைச்சர் அனுமதிக்கமாட்டார். பள்ளி பருவத்திலேயே மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். […]
தமிழகத்தில் மாவட்ட அளவில் காலநிலை மாற்ற இயக்கம் ஏற்படுத்தப்படும் என பேரவையில் அமைச்சர் அறிவிப்பு. தமிழ்நாடு சட்டப்பேரவையில் வனம், சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய அமைச்சர் மெய்யநாதன், சென்னையில் ரூ.2 கோடி செலவில் குத்துசண்டை அகாடமி அமைக்கப்படும். பசுமை இயக்கத்தை நடைமுறைப்படுத்த 25,000 பசுமை பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும். மீண்டும் மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில் கண்காட்சி என்ற திட்டம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய […]
தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு ஏற்படுத்தும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டில் இருந்து இன்று மேலும் 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து 11 வீரர் – வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். தடகளம், வாள்சண்டை, டேபிள் டென்னிஸ், பாய்மரப்படகு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். 4*400 மீட்டர் கலப்பு தொடர் ஒட்டப் பிரிவில் ரேவதி வீரமணி, தனலட்சுமி, சுபா, ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் […]