திமுக அரசு தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 21-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீட் விலக்கு – நம் இலக்கு என்ற தலைப்பில் கையெழுத்துஇயக்கம் தொடங்கியது. திமுக இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறும் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இந்த இயக்கம் குறித்து வரவேற்பும், விமர்சனங்களும் எழுந்தது. […]
தமிழக அரசு சார்பில் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் நிறுவனம் மூலம் பால் உள்ளிட்ட, பால் சம்பந்தப்பட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்ப்பட்டு வருகிறது. இந்த ஆவின் நிறுவன பால் ஒரு சில இடங்களில் பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என புகார்கள் எழுந்து வருகிறது. இது தொடர்பாக இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு […]
அரசுக்கு நெருக்கடி என்று நினைப்பவர்கள் கானல் நீரை பார்த்து மகிழ்வது போன்றுதான் என அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு. நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், சாதாரணமாக ஆளுநர் பதவி என்பது மாநிலங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். மாநில அரசு இயற்றும் சட்டங்கள் போன்றவை அரசியல் சாசன சட்டத்துக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை ஆளுநர் பார்க்க வேண்டும். எனவே தான் அவர்களுக்கு முதல் குடிமகன் என்ற அந்தஸ்து கொடுத்து மாநிலங்களில் வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஆளுநர்கள் அரசியல் […]
முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி இப்போது பெரும் நெருக்கடியில் உள்ளார் என அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம். மனு என்று பேசுகின்றவர்கள் மனு என்றால் என்ன என்பதை தெளிவாக கூற வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், மனுவை பற்றி இவர்கள் தெளிவாக பேசினால் மக்கள் கல்லை கொண்டு அடிப்பார்கள். மனுவை எந்த சூழலிலும் யாரும் ஏற்று கொள்ளமாட்டார்கள் என தெரிவித்தார். தமிழகத்தில் வேதனையில் இருப்பது மக்கள் அல்ல […]
தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசு. தகவல் தொழில்நுட்பவியல் துறை – தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை என பெயர் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தகவல் தொழில்நுட்பவியல் துறை பெயர் மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது […]