முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை வருகிற 28-ஆம் தேதி மக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். வேதா இல்லத்தை மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் என்றும் வேதா இல்லத்தில் ஜெயலலிதா படித்த புத்தங்கள், பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு இடம்பெறும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.