திமுக ஜனநாயக கட்சி இல்லை அரச குடும்பம் என்பதை மேடையில் உறுதி செய்தார் கே.என்.நேரு என ஜெயக்குமார் ட்வீட். திருச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதல்வர் அவர்கள் ரூ.238 கோடி மதிப்பில் 5 ஆயிரத்து 635 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். அண்ணா விளையாட்டு அரங்கில் ரூ.308 கோடி மதிப்பில் 5,951 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். ரூ.79 கோடி மதிப்பில் 22,716 […]
திமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் பணி மேற்கொண்டதால் தண்ணீர் வடிந்துள்ளது என அமைச்சர் கேஎன் நேரு பதில். அதிமுக செய்யாததால் தான் மழைநீர் தேங்கியது, திமுக செய்ததால் தான் மழைநீர் தேங்கவில்லை என அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்துள்ளார். கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 4 இடங்களில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாமை அமைச்சர்கள் கேஎன் நேரு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். செய்தியாளர்களிடம் பேசிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் […]
தமிழநாடு அமைச்சர் கேஎன் நேரு மீது அதிமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து. அமைச்சர் கேஎன் நேரு மீது அதிமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்து 2020-ல் கோவை பொதுக்கூட்டத்தில் எஸ்பி வேலுமணி குறித்து அவதூறாக பேசியதாக கோவை நீதிமன்றத்தில் கேஎன் நேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. வேலுமணியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கேஎன் நேரு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என […]
கடந்த 2012 ஆம் ஆண்டு அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டார்.இவரது சடலம் மார்ச் 29 ஆம் தேதி கல்லணை செல்லும் சாலையில் கண்டுபிடிக்கப்பட்டது.கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் அவரது உடல் போர்வையால் சுற்றப்பட்டு, கம்பிகளால் கட்டி காட்டில் வீசப்பட்டிருந்தது.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து,காவல்துறையினர் 12 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.ஆனால்,அதில் பெரிதும் பலனிக்காததால்,வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.பின்னர் தமிழக காவல்துறையே இவ்வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ராமஜெயம் மற்றொரு சகோதரர் […]
தூய்மைப் பணியாளர்களுக்கு வங்கிக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கேஎன் நேரு அறிவிப்பு. சென்னையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கேஎன் நேரு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பல்வேறு திட்டம் குறித்த அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். தூய்மைப் பணியாளர்களுக்கு வங்கிக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு […]
தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று நகராட்சி நிர்வாகம் அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் அமைச்சர் கே.என் நேரு, தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் செப்டம்பர் 15க்குள் விடுபட்ட பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தம், மகளிருக்கு இடஒதுக்கீடு போன்றவற்றில் குற்றசாட்டு உள்ளது. […]