திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரிவரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் ஆய்வு செய்து வருகிறது வருமான வரித்துறை. அதன்படி, அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 6 இடங்களில் 5க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று […]
தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று முன்தினம் துவங்கி இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பான தீர்மானம், அரியலூர் பட்டாசு அலை விபத்து தொடர்பான விவாதம், 39 இஸ்லாமிய கைதிகள் விடுதலை தொடர்பான விவாதம் என பரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்கள் போலவே இன்றும் தொகுதி வாரியாக அந்தந்த தொகுதி பிரச்சனைகள் மற்றும் பொது பிரச்சனைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பி […]
கலவரத்துக்கு காரணமான அனைத்து குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என அமைச்சர் எ.வ.வேலு பேட்டி. கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவியின் உயிரிழப்பை கண்டித்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. மாணவி மர்ம முறையில் உயிரிழந்ததுக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், அந்த தனியார் பள்ளி சூறையாடப்பட்டது. மாணவி மர்ம மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு,நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் கோயம்புத்தூர் நகரில் ரூ.230 கோடி செலவில் இராமநாதபுரம் மற்றும் சுங்கம் முக்கிய சந்திப்புகளில் 3.15 கி.மீ. நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள 4 வழித்தட மேம்பாலம் மற்றும் அதே தேசிய நெடுஞ்சாலையில் ரூ.60 கோடி செலவில் கவுண்டம்பாளையம் சந்திப்பில் 1.17 கி.மீ. நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள மேம்பாலம் ஆகியவற்றை திறந்து வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நெடுஞ்சாலைத் துறை சார்பில் […]
கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணி அடுத்த மாதம் 30ம் தேதிக்குள் 100% நிறைவு பெறும் என அமைச்சர் தகவல். சர்வதேசத் தரத்தில் ரூ.114 கோடி செலவில் மதுரையில் அமையவிருக்கும் கலைஞர் நினைவு நூலகக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக மதுரை புது நத்தம் சாலையில் பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகத்தில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் நினைவு நூலகம் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணி […]
தமிழகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெறும் வரும் பணிகள் குறித்து பேரவையில் அமைச்சர் எ.வே.வேலு விளக்கம். தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது, பேசிய அமைச்சர் எ.வே.வேலு, ரூ.39 கோடியில் கலைஞர் நினைவிட பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை – சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் திமுக அரசு தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. சம்பந்தபட்ட பகுதி மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு, அதனடிப்படையில் திட்டத்தின் மீது நடவடிக்கை […]