23.8% குழந்தைகள் படுக்கையில் இருக்கும்போது ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று மக்களவையில் அமைச்சர் தகவல். இதுதொடர்பாக டெல்லி நாடாளுமன்ற மக்களவையில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அளித்த பதிலில், சுமார் 23.8 சதவீத குழந்தைகள் தூங்குவதற்கு முன் படுக்கையில் இருக்கும் போது ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர் என்றும் 37.15 சதவீத குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் கவனம் செலுத்தும் திறன் குறைந்துள்ளதாகவும் எழுத்துப்பூர்வ பதிலில்தெரிவித்தார். குழந்தைகளின் இணைய அடிமைத்தனம் குறித்த குறிப்பிட்ட தகவல் எதுவும் இல்லை, […]