காவிரியில் மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயன்று வரும் நிலையில்,இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும்,மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்றும் பிரதமர் மோடிக்கு அண்மையில் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதற்கிடையில்,தஞ்சை கல்லணையில் ஆய்வு செய்த பின்னர் காவிரி மேலாண்மை ஆணையத்தின் குழு தலைவர் ஹல்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:”மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரம் […]
வருகின்ற ஜூலை 3 ஆம் தேதி முதல்வரும்,திமுக தலைவருமான ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திமுகவின் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெறவுள்ளதாக அக்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அதன்படி,ஜூலை 3 ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் காலை 9.30 மணி முதல் 5 மணி வரை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.மேலும், உள்ளாட்சியிலும் நல்லாட்சி உள்ளிட்ட தலைப்புகளில் பேச்சாளர்கள் பேசுவார்கள் என்றும்,திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி […]
மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்ட அறிக்கை பற்றி விவாதிக்கக் கூடாது என ஆணையிட வேண்டி உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு புதிய மனு. மேகதாது அணை விவகாரத்தில் விவாசாயிகள் மற்றும் மக்களின் நலன்களையும், உரிமைகளையும் காக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு பிரதமரை சந்தித்தபோது காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிட கர்நாடக […]
அனைத்து தொகுதிகளிலும் ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என்பது என் எண்ணம் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பேச்சு. துறை வாரியான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடத்துவதற்கு இன்று மீண்டும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழக சட்டமன்ற கூட்டத்தில் இன்று நீர்வள துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தடுப்பணை கட்டுவதில் திமுக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும், இந்த 5 ஆண்டு கால ஆட்சியில் 1,000 […]
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சா் துரைமுருகனின் துபாய் பயணம் ஒரே நாளில் இரண்டு முறை ரத்து. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இரண்டு நாள் பயணமாக நேற்று காலை எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானத்தில் துபாய் செல்ல இருந்தார். இதற்காக அவர் மீனப்பாக்கம் விமான நிலையம் வந்த நிலையில், விசாவில் பிரச்னை என்பதால் பயணத்தை ரத்து செய்துவிட்டு, வீட்டிற்கு சென்றுவிட்டாா். இதன்பின், விசா பிரச்சனை முடிந்து நேற்று மாலை ஏர் இந்தியா விமானம் மூலம் துபாய் புறப்பட விமான நிலையம் […]
தமிழக முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் திட்டம் செய்லபடுத்தப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் ஏரிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த பணியை ஒரு திட்டமாகவே செயல்படுத்தப்படும் எனவும் அறிவித்தார். மேலும், மாநில முழுவதும் […]
தமிழகத்தில் நீர்நிலைகளை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன்விழா காணும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. பேரவையில் பொன்விழா காணும் அமைச்சர் துரைமுருகனுக்கு, ஓபிஎஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மாற்று எதிர்க்கட்சி தலைவர்கள் பாராட்டும், வாழ்த்துக்களும் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழகத்தில் நீர்நிலைகளை கண்காணிக்க ஆளில்லா […]
தமிழகம் முழுவதும் உள்ள ஆறுகள், ஓடைகளின் குறுக்கே பணைகள் அமைக்க திட்டம் என நீர்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல். விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாநிலம் முழுவதும் ஆறுகள், ஓடைகளின் குறுக்கே சாத்தியமுள்ள இடங்களில் தொடர் தடுப்பணைகள் அமைக்க திட்டம் உள்ளதாகவும் முதல் கட்டமாக காவிரி, கொள்ளிடம், தாமிரபரணி ஆறுகளின் குறுக்கே கதவணைகள் அமைக்க உத்தேசம் என நீர்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மேகதாது அணையை கர்நாடகா கட்ட முயற்சிப்பதை தமிழக […]
மேகதாதுவில் அணை கட்டாமல் தடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும் என்றும் தமிழ் மக்களின் நலன் கருதி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல் இல்லாமல், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முன்பாகவே, தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து […]
கர்நாடகா அணை கட்டும் விவகாரத்தில் நடுவர் மன்றத்தின் மூலம் தீர்வு காணப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியில், தமிழக அரசின் அனுமதி இல்லாமல், கர்நாடகா அரசு அணை காட்டியிருப்பது தமிழக விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சார்பில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், 02.07.2021 அன்று சில நாளேடுகளில் மார்கண்டேய நதியின் குறுக்கே […]
முதல்வர் முக ஸ்டாலினை தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நீர்வளத்துறை அமைச்சராக பதவியேற்றார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் சற்றுமுன் பதவியேற்றார். அப்போது, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் என்று கூறி தமிழக முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். முதல்வர் முக ஸ்டாலினை தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நீர்வளத்துறை அமைச்சராக பதவியேற்றார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காட்பாடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள துரைமுருகன், திமுக அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராக […]