சசிகலா தொடர்ந்து அதிமுக கொடியை பயன்படுத்தி வருவது சட்ட விரோதம் என்று சட்டத்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா விடுதலையான நிலையில் நேற்று காலை பெங்களூருவிலிருந்து தமிழகத்திற்கு காரில் புறப்பட்டார். சசிகலா புறப்பட்ட காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு இருந்தது. அதிமுக அமைச்சர்கள் புகார் கொடுத்ததால் சசிகலா அதிமுக கொடி பயன்படுத்தக்கூடாது என போலீஸ் தெரிவித்த நிலையிலும் சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தி இருந்தது. சசிகலா அதிமுக கொடியுடன் தமிழகம் […]
சசிகலா வழக்கு நடத்த வேண்டுமானால், ஐநா சபைக்கு தான் போகணும், இல்ல மன்னார்குடி கட்டப் பஞ்சாயத்துதான் நடத்த முடியும் – அமைச்சர் சிவி சண்முகம். சசிகலா காரில் அதிமுக கொடி பயன்படுத்தியதால், அதிமுக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் தமிழக டிஜிபியிடம் புகார் அளித்தனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, சசிகலா மீண்டும் கொடியை பயன்படுத்தக் கூடாது என்பதற்காக புகார் அளித்துள்ளோம். அதிமுகவில் சசிகலா உறுப்பினர் கூட கிடையாது. […]
அதிமுக தலைவர்கள் பதவிக்காக வெளியே சென்றுவிட்டு கட்சிக்கு வருகின்றனர் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், அதிமுக தலைவர்கள் பதவிக்காக வெளியே சென்றுவிட்டு கட்சிக்கு வருகின்றனர். ஆனால் அதிமுக தொண்டர்கள், எங்கும் செல்லாமல் உறுதியாக கட்சிலேயே உள்ளனர். அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமரவைக்கும் வேண்டும் என்று இளைஞர்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. […]
ஹெச்.ராஜா பேசும் வசனங்களை நீதிமன்றத்தில் பேச சொல்லுங்கள் என சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை,நவம்பர் 6-ஆம் தேதி முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை வேல் யாத்திரை நடைபெறவுள்ளதாக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்க்கு தமிழக அரசு சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால்,தடையை மீறி பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தி வருகின்றனர்.இந்த யாத்திரை டிசம்பர் 6-ஆம் தேதி முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நாள் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் […]
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சக்ரபாணி மகனுக்கு சட்டத்திற்கு புறம்பாக குவாரி குத்தகை விடப்பட்டிருப்பது என மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்ட நிலையில்,இந்த விவகாரத்தில் தவறு நிரூபிக்கப்பட்டால் உடனடியாக பதவி விலகத் தயார் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ., சக்ரபாணி மகனுக்கு, கல்குவாரி குத்தகையை வழங்கியிருக்கிறார் கனிமங்கள் வளத்துறை அமைச்சர் திரு. சி.வி.சண்முகம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.மேலும் அவரது அறிக்கையில், பொது ஊழியர்களின் உறவினர்களுக்குக் குத்தகைகள், ஒப்பந்தங்கள் வழங்கப்படக் கூடாது என்ற விதிக்கு […]