மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானம் மூலம் நாளை சென்னை வருகிறார். நாளை இரவு சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர், ஆவடியில் உள்ள சிஆர்பிஎஃப் மையத்தில் தங்குவதாக தகவல் கூறப்படுகிறது. இதையடுத்து புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க 24ம் தேதி ஹெலிகாப்டரில் செல்லும் மத்திய அமைச்சர் 390 காவலர்களுக்கான பணி ஆணை உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை தொடக்கி வைக்க உள்ளார். மத்திய அமைச்சர் அமித் ஷா வருவதையொட்டி, புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்து […]
எல்லையில் தொந்தரவு செய்பவர்களுக்கு அவர்களுடைய பாணியிலேயே பதிலடி கொடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்திய எல்லைகளைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கினை ஆற்றிவரும் எல்லை பாதுகாப்புப் படையின் 18-வது பதக்கம் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இவ்விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு வீர மரண அடைந்தவர்களுக்கு, துணிச்சலுடன் பணி புரிந்தவர்களுக்கும் விருதுகளை வழங்கி கௌரவித்தார். இதன்பின் இந்த விழாவில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உயர்ந்த தியாகம் செய்தவர்களுக்கு நான் வீரவணக்கம் […]
உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் 197 பேரை காணவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்திலுள்ள பனிச்சரிவு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த வீடுகள் வெள்ளத்தில் அடித்து சென்றது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாநில பேரிடர் மேலாண்மைத் துறை நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் 18 பேர் சடலமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும், தேசிய பேரிடர் மீட்பு […]