சென்னையில் மின்சாரத்தில் இயங்கும் வகையில் பேருந்துகள் சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஓரிரு வாரங்களில் பயணிகளின் வசதிக்காக இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேன்று சட்டசபையில் பேசிய அவர், தமிழகத்தில் முதற்கட்டமாக மின்சாரத்தில் இயங்கும் வகையிலான பேருந்துகள் 100 இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அவற்றில் , 80 பேருந்துகள் சென்னையிலும், 10 பேருந்துகள் மதுரையிலும் , 10 பேருந்துகள் கோவையிலும் இயக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதிதாக திறக்கப்படும் மருத்துவமனைகளில் ஏழை,எளிய மக்களுக்கு உயர்தர சிகிச்சைஅளிக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், மருத்துவம் மட்டுமின்றி மருத்துவமேற்படிப்பு படிக்கவும் எய்ம்ஸ் மருத்துவமனை உதவும் .தஞ்சை,நெல்லை,மதுரையில் அதி நவீன வசதியுடன் கூடிய புதிய மருத்துவமனைகளை பிரதமர் திறந்துவைக்கிறார் .புதிதாக திறக்கப்படும் மருத்துவமனைகளில் ஏழை,எளிய மக்களுக்கு உயர்தரசிகிச்சைஅளிக்கப்படும். எய்ம்ஸ் கட்டப்பட்டவுடன் முதலில் ஒ.பி. வார்டும், பின்பு அடுத்தடுத்த வார்டுகள் செயல்பட துவங்கும். எய்ம்ஸ்-ல் தென்தமிழக மக்கள் தங்கி உயர்தர மருத்துவ சிகிச்சை பெற […]