மக்களவை தேர்தலில் தவறான கூட்டணி அமைத்ததால் தோல்வி அடைந்தோம் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை அடைந்தது.மக்களவையில் 1 இடத்திலும் ,இடைத்தேர்தலில் 9 இடத்திலும் வெற்றிபெற்றது. இதற்கு முக்கிய காரணம் அதிமுக கூட்டணி தான் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அதிமுக கூட்டணியில் பாஜக ,பாமக,தேமுதிக,புதிய தமிழகம் ,தமாக,புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் மக்களவை தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக […]