சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு வெளியானபின் பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் பகுதி மக்களுக்கு தமிழக அரசு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு, அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், பொதுத்தேர்வுக்கான அட்டவணை தயார் நிலையில் உள்ளதாக கூறினார். ஆனால் […]
தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சத்தியம் – அமைச்சர் செங்கோட்டையன். தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 3வது வாரத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சத்தியம் என்றும் தெரிவித்துள்ளார். ஒரு சிலரை தவிர 10-ம் வகுப்பு மாணவர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் கொரோனா பாதித்த பகுதிகளில் உள்ள […]
10 ஆம் வகுப்பு தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்றும் மாணவர்கள் 9.45 க்கு வரவேண்டும். காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இருந்து விலக்களிப்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதையடுத்து 10 ஆம் வகுப்பு தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே அமரும் வகையில் வகுப்பறை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும், 10 ஆம் வகுப்பு தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்றும் […]
ஜூன் மாதம் 2ஆம் வாரம் முதல் தமிழகத்தில் நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல். தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதுமே பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கிறது. பள்ளி கல்லூரிகள் தமிழகத்தில் எப்போது திறக்கப்படும்? பொதுத்தேர்வுகள் எப்போது தொடங்கும்? நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் எப்போது ஆரம்பம் ஆகும் என பல்வேறு கேள்விகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. இதற்கு பதிலளிக்கும் வகையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் […]
மாணவர்கள் விளையாடிக்கொண்டே கணிதம் கற்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் நடைபெற்ற நிகச்சில் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்கள் விளையாடிக்கொண்டே கணிதம் கற்கும் வகையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம் மூலம் அவர்களுக்கு பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து அண்ணா பல்கலைகழகத்தில் பயின்று வரும் மாணவர்களில், 21 சதவீதம் […]
தமிழக அரசு 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அரசாணையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.ஆனால் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளது.இந்த நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், தமிழக அரசு 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அரசாணையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கல்வி […]
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செருப்புக்கு பதில் இலவச ஷு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன்தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது . அந்த வகையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,நடப்பு கல்வியாண்டில் 11, 12-ம் வகுப்பு படிக்கும் 10 லட்சத்து 40 ஆயிரம் மாணவா்களுக்கு இம்மாத இறுதிக்குள் மடிக்கணினிகள் வழங்கப்படும். […]
எம்ஜிஆர் நூற்றாண்டு நுழைவாயில் வளைவு_வை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். அதிமுக கூட்டணியை வெல்ல தமிழகத்தில் எந்த கட்சியும் கிடையாது என்று அமைச்சர் பேசினார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சார்பில் நுழைவுவாயில் மற்றும் எம்ஜிஆர் நூற்றாண்டு நுழைவாயில் வளைவு_வை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று திறந்துவைத்தார்.இதில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதையடுத்து அதிமுக கட்சி தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் , நமது கட்சியின் கூட்டணியை வெல்வதற்கு எந்த கட்சியும் தமிழகத்தில் […]
5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்த மத்திய அரசு திட்டம் வகுத்தது. 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தலாம் என்றும் மேலும் இதில் தோல்வியடையும் மாணவர்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களில் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று ஒரு புதிய சட்ட திட்டத்தை கொண்டு வந்தது. மேலும் 5 மற்றும் 8-ஆம் வகுப்பு […]
மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது.தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒவ்வொரு பாடத்திற்கும் 2 மதிப்பெண்கள் வீதம் ஆறு பாடங்களுக்கு 12 மதிப்பெண்கள் வழங்கப்படும். இத்திட்டம் அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.