தமிழகத்தில் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வரும் 21-ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தம் – அமைச்சர் செங்கோட்டையன். கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருவதை அடுத்து, கடந்த சில மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பல மாதங்கள் பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பெரும்பாலான பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வரும் 21-ஆம் […]
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுக்கு மேல் செல்லாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுக்கு மேல் செல்லாது என்றும் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆசிரியர் தகுதி தேர்வு 7 ஆண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் கூறியுள்ளார். மேலும், டெட் தேர்வு எழுதி, தேர்ச்சி அடைந்து 7 ஆண்டு நிறைவு செய்தவர்களுக்கு மீண்டும் […]
கொரோனா குறைந்தவுடன் இந்தாண்டு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்துவது பற்றி முடிவெடுக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன் கொரோனா குறைந்தவுடன் இந்தாண்டு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்துவது பற்றி முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 10 , 12 மட்டுமின்றி 8, 11-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் மறுதேர்வு எழுத வாய்ப்பு தரப்பட்டுள்ளது என்றும் அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் எதற்காக பணம் வசூலித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளிகளை எப்போது திறப்பது என்பது பற்றி முதல்வர் பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை. தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது பற்றி முதல்வர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வு மையங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் முதல்வர் ஆலோசித்து வருகிறார். இதனிடையே தமிழகத்தில் மே 31 ஆம் தேதியுடன் […]
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். பின்னர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் […]
தமிழக முழுவதும் விடுபட்ட 12 ஆம் வகுப்பு தேர்வு ஜூன் 4 இல் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு, நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் நீட், ஜேஇஇ தேர்வு மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கான புதிய தேர்வு தேதிகள் மத்திய மனிதவள அமைச்சார் அறிவித்தார். அந்தவகையில், தமிழகத்தில் […]
தமிழக முழுவதும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள தேர்வு ஜூன் 2 ஆம் தேதி முதல் நடைபெறும் – அமைச்சர் செங்கோட்டையன் தமிழக முழுவதும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள தேர்வு ஜூன் 2 ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இதுபோன்று விடுபட்ட 12 ஆம் வகுப்பு தேர்வு ஜூன் 4 இல் நடைபெறும் என்றும் 12 ஆம் வகுப்பை சேர்ந்த 36,842 மாணவர்களுக்கு […]
தனிமனித இடைவெளியுடன் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் – அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற முடிவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், தனிமனித இடைவெளியுடன் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். இதனிடையே நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்கள் […]
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு தேர்வுக்கு இடையிலும் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும். தேர்வு எப்போது நடத்தப்படும் என மே 3 ஆம் தேதிக்கு பிறகு முடிவு எடுக்கப்பட்டு, தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார். இதனிடையே ஊரடங்கு நீட்டிப்பால், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதே […]
தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை விவாதத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் மாணவர், பெற்றோர் பெயர் அச்சிடப்படும் என்று தெரிவித்தார். அதுபோல் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் பெயர் மாற்றப்படுகிறது. அது தனியார் பள்ளிகள் இயக்குனரகம் என பெயர் மாற்றம் செய்யப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், தனியார் பள்ளிகளை முறைப்படுத்த விரைவில் சட்டம் இயற்றப்படும்.அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். கல்விக்காக விரைவில் தொலைக்காட்சி தொடங்கப்படும்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு கற்பிப்பு கட்டணம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார்.
அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பொதுமக்களிடம் ஆங்கில மோகம் உள்ளதை கருத்தில் கொண்டு அங்கன்வாடி மையங்களில் ஒரு லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அடுத்த மாதம் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் ஈரோடு முருங்கந்தொழுவு பகுதியில் கீழ்பவானி பாசன வாய்க்காலின் கசிவுநீரை குழாய் மூலம் 6 கிலோ மீட்டர் தூரம் கொண்டு சென்று குளத்தில் சேகரிக்கும் திட்டத்தின் தொடக்க […]
வடகிழக்கு பருவமழையினால் பள்ளிகள் பாதிக்காத வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கோபியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், வடகிழக்கு பருவமழையினால் பள்ளிகள் பாதிக்காத வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.பள்ளி கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, மழை வெள்ளம் வரும்போது மாணவா்கள் பாதிக்காத வகையில் முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.