கிளைச் செயலாளர் கூட துணை முதல்வராகும் வாய்ப்பு அதிமுகவில் உள்ளது. ஆனால் திமுகவில் அதுபோல் கிடையாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். கிளைச் செயலாளர் கூட துணை முதல்வராகும் வாய்ப்பு அதிமுகவில் உள்ளது, திமுகவில் அதுபோல் கிடையாது என்று தமிழக அரசின் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். திராவிட இயக்கம் இருந்தால்தான் தமிழகம் முன்னேறும். தமிழனின் பெருமை தெரிய திராவிட இயக்கங்கள் தேவை. தமிழனின் பெருமையை அறிய சோழர்களின் மற்றும் பாண்டியர்களின் வரலாற்றை […]
நடப்பு குறுவை சாகுபடிக்கு தேவையான 29 ஆயிரத்து 889 மெட்ரிக் டன் யூரியா, டிஏபி, எம்ஓபி, காம்ப்ளக்ஸ் போன்ற உரங்கள் இருப்பில் உள்ளன. காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பை முன்னிட்டு டெல்டா மாவட்டங்களில் பயிர் கடன் இடுபொருள்கள், உர விநியோகம் தொடர்பாக மண்டல இணைப்பதிவாளர் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்களுடன் ஆய்வு கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ […]
குடும்ப அட்டை இருந்தால் போது கூட்டுறவு வங்கிகளில் எளிமையாக கடை பெறலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். ரேஷன் கார்டு இருந்தால் போதும் கூட்டுறவு வங்கிகளில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ரூ.50,000 பெற்று கொள்ளலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மாடக்குளம் பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்துள்ளார். மேலும், முதல்வர் பழனிசாமி உத்தரவின்படி, கூட்டுறவு வங்கிகளில் கடன் வசதிகள் பெற எளிமையாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மதுரை செல்லூர் பகுதியில் அமைந்துள்ள ரவுண்டானாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கபடி விளையாட்டு வீரர்களின் கற்சிலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. அதற்கான இடத்தை ஆய்வு செய்த தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மதுரையின் நுழைவுவாயிலாக இருக்கக்கூடிய முக்கியமான சந்திப்புகளில் தொன்மை வாய்ந்த பழமையான சின்னங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் கபடி வீரர்கள் அதிகம் உள்ள செல்லூர் பகுதியில் கபடி வீரர்களின் சிலை அமைப்பதில் பெருமை […]
மதுரை பெத்தானியாபுரம் பல்லவன் நகர் பகுதியில் ரூ.35 லட்சம் மதிப்பிலான கழிவு நீரேற்று நிலையம் அமைக்க பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் அதிமுகவின் எதிரி என்றும், ஆட்சியைக் கலைப்பதை கருக்கலைப்பு போன்று அவர் நினைத்து விட்டார் என்றும் குற்றம்சாட்டினார். இதையடுத்து ரஜினிகாந்த் – கமல் இணைந்தாலும் அதிமுகவுக்கு எந்த கவலையும் இல்லை என்றும், சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசு […]
அனைத்து மாநிலங்களிலும் நீட் கட்டாயம் என்பதால் வேறு வழியில்லாமல் இங்கு இருக்கிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், நீட் தேர்வு வேண்டாம் என்ற கொள்கையில் இருந்து நாங்கள் மாறுபடவில்லை. ஆனால் அனைத்து மாநிலங்களிலும் நீட் கட்டாயம் என்பதால் வேறு வழியில்லாமல் இங்கு இருக்கிறது.மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழக மாணவர்கள் சிறந்த தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளனர் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
வருங்காலத்தில் அதிமுகவை யாராவது ஒரு பெண் வழிநடத்தும் காலகட்டம் வரும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது. பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் இருந்தார். இதன் பின்னர் அதிமுகவில் சிலர் […]