நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.மேலும் 58 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். ஆனால் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் இரவீந்திரநாத் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.இதனால் அதிமுக-வினர் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில், அடுத்தக்கட்ட மத்திய அமைச்சரவை பட்டியலில் தமிழகத்திற்கு […]