தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்காக உள்துறை அமைச்சகத்தின் மூலம் குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளார் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றசாட்டியுள்ளார். சென்னையில் செய்தியார் சந்திப்பில் பேசிய அமைச்சர், ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதற்காகவே மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்புகிறார் ஆளுநர். தன்னிடம் இருக்கும் அதிகாரம் பறிபோய் விடக்கூடாது என்ற எண்ணத்தில் ஆளுநர் செயல்படுகிறார். துணைவேந்தரை நியமிக்கக்கூட மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கக்கூடாது என நினைப்பது எந்த வகையில் நியாயமாக […]