லண்டன் தேம்ஸ் நதியைப் போல் மதுரை வைகை நதி விரைவில் மாற உள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரையில் அதிமுக மேற்கு இளைஞர் மற்றும் பெண்கள் பாசறையின் உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு 2021 தேர்தலில் திமுக ஆட்சி பிடிக்குமா? பிடிக்காதா? என்று ஸ்டாலின் ஏங்கிக் கொண்டிருக்கிறார். யூடியூப், ஃபேஸ் புக்,டுவிட்டர் மூலம் ஏதாவது ஒரு செய்தியை பரப்பி அரசுக்கும் அதிமுக கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் […]