மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அன்மையில் இந்திய ராணுவத்தை வெகுவாக பாராட்டினார். கால்வான் பள்ளதாக்கு, தவாங் என இந்திய எல்லை பகுதியில் அத்துமீறிய அண்டை நாட்டு ராணுவத்தினரை இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து அனுப்பினர். இதனை குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், இந்திய ராணுவத்தை எவ்வளவு பாராட்டினாலும் போதாது என குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில், ‘ எப்போதும் உண்மையை அடிப்படையாக வைத்து தான் அரசியல் செய்ய வேண்டும். பொய்யை […]
டெல்லியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உயர்நிலை 2+2 வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை. இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கு இடையே அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் மாரிஸ் பெய்ன் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். மேலும், இருநாட்டு உயர் அதிகாரிகளும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் விவகாரம், சர்வதேச அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு […]
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் பல சுற்றுகள் முடிவடைந்த நிலையில், ஆரம்பத்தில் இருந்து தற்போதுவரை திமுக முன்னிலை பெற்று வருகிறது. திமுக 153 இடங்களிலும், அதிமுக 80 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் 1, நாம் தமிழர் கட்சி 0, அமமுக 0, என முன்னிலையில் உள்ளனர். இதில் திமுக நேரடியாக போட்டியிட்ட 119 இடங்களிலும், அதன் […]
இந்தியா – ரஷியா இடையே ஏ.கே. 47-203 ரக துப்பாக்கிகள் தயாரிப்பதற்கான முக்கிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது என்று ரஷ்ய அதிகாரப்பூர்வ செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாஸ்கோவிற்கு தொடர்ந்து வருகை தந்திருந்தபோது, இந்தியாவில் ஏ.கே.47-203 ரக துப்பாக்கிகளை தயாரிப்பதற்கான முக்கிய ஒப்பந்தத்தை இந்தியாவும் ரஷ்யாவும் இறுதி செய்துள்ளதாக ரஷ்ய அதிகாரப்பூர்வ செய்தி ஊடகம் வெளியிட்டுள்ளது. இந்த AK-47 203 ரக துப்பாக்கி என்பது AK-47 துப்பாக்கியின் மற்றோரு புதிய பரிமாணம் என்றும் இது […]
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்தின் லடாக் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. லடாக்கில் சீன இராணுவத்துடன் எல்லையில் ஏற்பட்ட மோதல் கருத்தில் கொண்டு பாதுகாப்பு நிலைமைகளை ஆய்வு செய்ய ராஜ்நாத் சிங் நாளை லடாக் செல்லவிருந்தார். இந்நிலையில், அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் மீண்டும் பயணம் செய்யும் தேதி வெளியாகவில்லை. இரு நாடுகளின் படைகளுக்கிடையேயான மோதலுக்குப் பிறகு பாதுகாப்பு அமைச்சரின் லடாக் பயணத்தின் முதல் பயணமாக இது இருந்தது. அவருடன் ராணுவ தலைமை ஜெனரல் எம்.எம். நர்வானே செல்லவிருந்தார். இராணுவத் தலைவர் […]