சென்னை : தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் தற்போது மலையேற்ற விரும்பிகள் பயன்பெரும் வகையில் “தமிழ்நாடு மலையேற்றத் திட்டம்” எனும் திட்டத்தையும் அதற்கான புதிய இணையதளத்தையும் வனத்துறை அமைச்சர் பொன்முடி இன்று துவக்கி வைத்துள்ளார். மலையேற விரும்பும் சுற்றுலாவாசிகள் TrekTamilnadu.com எனும் தமிழக அரசின் பிரத்யேக மலையேற்ற தளத்தில் பதிவு செய்து, உரிய அனுமதி மற்றும் மலையேற முறையாக பயிற்சி பெற்ற பழங்குடியின மற்றும் மலைகிராமங்களில் உள்ள இளைஞர்கள் உதவியுடன் மலையேறலாம். இதற்கான முதற்கட்டமாக 300 பேர் நியமனம் […]
சென்னை : தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பில் உள்ள உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக துணை முதலமைச்சர் எனும் பொறுப்பில் அமரவைக்கப்படுவார் என்ற செய்தி அவ்வப்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்க பயணம் மேற்கொள்ளவதற்கு முன் “துணை முதலமைச்சர்” குறித்த சந்தேகத்திற்கு விடை கிடைக்கும் என பலரும் எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால், அதுபற்றி எந்த அறிவிப்பையும் அறிவிக்காமல், முதலமைச்சர் தனது அமெரிக்க […]
சென்னை : அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டணம் உயர்வு இல்லை என அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். அண்ணா பல்கலை.யின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக்கட்டணம் 50% வரை உயர்வதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. அதன்படி, தன்னாட்சி கல்லூரிகளில் பட்டப்படிப்பு சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் கட்டணமும் ரூ.1000-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்படுகிறது. தன்னாட்சி பெறாத கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டணம், இளநிலை பட்டங்களுக்கு ரூ.150ல் இருந்து ரூ.225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை பட்டங்களுக்கு […]
சென்னை: தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 9 கல்லூரிகளுக்கு பல்வேறு காரணங்களால் இந்தாண்டு மாணவர் சேர்க்கை அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு 433 கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கு இன்று முதல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங்கை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். இன்று மற்றும் நாளை, அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத சிறப்பு இடஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், […]
Ponmudi: சென்னை கிண்டியில் பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் அமைச்சராக பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும்படி ஆளுநர் ரவிக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியிருந்தார். Read More – விருதுநகரில் களமிறங்கும் விஜயகாந்த் மகன்.. தேமுதிக வேட்பாளர் லிஸ்ட்…. ஆனால், ஆளுநர் இதற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து, பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் […]
Ponmudi : தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீதான சொத்துகுவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால், தனது அமைச்சர் பதவியை மட்டுமல்லாது திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தார் பொன்முடி. Read More – கனிமொழி, ஆ.ராசாவுக்கு எதிரான 2ஜி வழக்கு.! டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் பொன்முடி. உச்சநீதிமன்றத்தில் பொன்முடியின் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து […]
Ponmudi Case : தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது சொத்து குறிப்பு வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் இருவரும் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்தாலும், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பு அளித்து இருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், […]
முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. கடந்த 2006 முதல் 2011 வரையில் திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வித்துறை மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த பொன்முடி, தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது கடந்த 2011இல் அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்சஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் […]
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த பொன்முடி மீது கடந்த 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையானது வழக்கு பதிவு செய்து இருந்தது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. முன்னதாக விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி நிரபராதி என தீர்ப்பளித்து இருந்த நிலையில், நேற்று அந்த தீர்ப்பை ரத்து செய்து பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீதான […]
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 2006 முதல் 2011 வரையில் திமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புகார் பதியப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் , பொன்முடி, விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி கடந்த […]
வடதமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்த பின்னர், அடுத்து தென்தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்னும் மழைநீர் வடியாத சூழல் நிலவுகிறது . இரு மாவட்ட மக்களில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 26 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், […]
தற்போதைய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியின்போது உயர்கல்வி மற்றும் கனிம வள அமைச்சராக இருந்தார். அப்பொழுது ரூ.1.72 கோடி அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவியை விசாலாட்சி மீதும் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. அப்போது நீதிபதி சுந்தரமூர்த்தி […]
கடந்த 2006 முதல் 2011 காலகட்டத்தில் கனிமவளத் துறை அமைச்சராக இருந்த அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இந்த பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில், அமைச்சர் பொன்முடியும் அவரின் மகன் கெளதம சிகாமணியும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கடந்த ஜூலை மாதம் […]
தமிழக கலை அறிவியல் கல்லூரிகளின் உட்கட்டமைப்பை சரி செய்வதற்காக முதல்வர் 1000 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். – உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தகவல். சென்னையில், கலை அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களோடு இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், ‘ மாதம் மாதம் ஆலோசனை கூட்டம் நடைபெறும். அதில், தலைமை ஆசிரியர் ஆலோசனை கூட்டம், துணை வேந்தர்கள் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளோம். […]
பதக்கம் வென்ற 283 பேரில் 117 பேர் ஆண்கள், 166 பேர் பெண்கள் இருந்தனர். இதுதான் திராவிட மாடல். – அமைச்சர் பொன்முடி. சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் உறுப்பு கல்லூரிகளின் 17வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு மாணவர் மாணவிகளுக்கு பதக்கங்களை வழங்கினார். அதன் பிறகு மேடையில் பேசிய அமைச்சர், ‘ அந்த ஒரு காலத்தில் பெண்கள் உயர் கல்வி பயிலாத காலமாக […]
கல்லூரி விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் நேர்முகத்தேர்வில், கௌரவ விரிவுரையாளர்களுக்கு 15 மதிப்பெண்கள் கொடுக்கப்படும். என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் செயல்பட்டு வரும் கலை அறிவியல் கல்லூரிகளில் விரிவுரையாளர், ஆசிரியர் போன்ற பணிகளுக்கு 4000 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, ஏற்கனவே கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக வருடக்கணக்கில் பணிபுரியும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தற்போது காலிப்பணியிடங்கள் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், ‘ கௌரவ விரிவுரையாளர்கள் மீது எங்களுக்கு எந்த கோபமும் கிடையாது. கல்லூரிகளில் 4000 காலிப்பணியிடங்கள் […]
கல்லூரியில் நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். புதுமையான தயாரிப்புகளை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வந்தால் போதும். என கிண்டி வேலைவாய்ப்பு திறன் குறித்த கருத்தரங்கில் அமைச்சர் பொன்முடி பேசினார். இன்று சென்னை, கிண்டியில், எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகள் & திறன்களில் முதலீடு செய்வது குறித்து கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இந்த கருத்தரங்கில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அப்போது அந்த கருத்தரங்கில் பேசிய அமைச்சர் பொன்முடி, ‘ கல்லூரியில் நாம் […]
ஓசியில் பெண்கள் பேருந்தில் பயணம் செய்கிறார் என திமுக அமைச்சர் பொன்முடி கூறியது குறித்து, இபிஎஸ் பேசுகையில்,’ இதற்கான பணம் உங்கள் பணம் இல்லை. மக்கள் பணம். வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என தனது கருத்தை பதிவிட்டார். இன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில்அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தி வைப்பது தான் […]
சென்னை:தமிழகத்தில் அனைத்து தனியார் மற்றும் அரசு கல்லூரி மாணவர்களுக்கு பிப்.1 முதல் பிப்.20 வரை ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில்,கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக மாணவர் பிரதிநிதிகளுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு […]
தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா காரணமாக அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் காலவரம்பின்றி ஒத்தி வைக்கப்படுவதாகவும்,கொரோனா தாக்கம் குறைந்த பிறகு பின்னர் தேர்வுகள் நடைபெறும் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மேலும்,எழுத்துத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டாலும்,செய்முறை தேர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.எனவே,விடுமுறையைப் பயன்படுத்தி பாடங்களை படித்து […]