விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்று நடிகர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு தெரிவித்தார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளர். மேலும் அவர் 7.5% இடஒதுக்கீடு தொடர்பாக 5 அமைச்சர்கள் ஆளுநரை சந்திக்க உள்ளனர்.நல்ல முடிவு வரும் என எதிர்பார்ப்போம். இடஒதுக்கீட்டில் அதிமுகவுன் திமுக இணைந்து போராட தயாராக உள்ளது என்று கூறுவது தேவையற்ற ஒன்று என்று விமர்சித்துள்ளார்.
சென்னை ஆவடியில் உள்ள பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பாண்டியராஜன், தமிழகத்தில் உள்ள பொக்கிஷங்கள், புராதன சின்னங்கள் மற்றும் கலைபண்பாட்டு நினைவு சின்னங்கள் போன்றவற்றை எந்த காலத்திலும் மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டிற்கு அதிமுக அரசு ஒருபோதும் விட்டு கொடுக்காது. பின்னர் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இதை தவறாக புரிந்துள்ளார். தமிழகத்தில் தற்போது 39,000 கோவில்கள் சிறப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் திமுக காலத்தில் கோவில்களை சரியாக கவனிக்காமல் இருந்தது என்றும் அதிமுக ஆட்சியில் கூடுதலாக […]
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் மாஃபா பாண்டியராஜன், இந்து கோயில்களை சிறப்பாக நடத்த வேண்டும் என்பது தமிழக அரசின் கொள்கையாகும் என்று தெரிவித்தார். ஆனால், ஸ்டாலினுக்கு புராதனச் சின்னங்களுக்கும், நினைவு சின்னங்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரியவில்லை. பல மாநில அரசுகள் புராதனச் சின்னங்களைப் பாதுகாக்கவில்லை என்ற காரணத்தால் மத்திய அரசு அதை பாதுகாக்கவுள்ளதாக மத்திய அமைச்சா் அண்மையில் தெரிவித்திருந்தாா். மேலும் தமிழகத்தில் பழமை வாய்ந்த 7 ஆயிரம் கோயில்கள் உள்ளதாக மத்திய அமைச்சா் […]
சென்னை வரும் அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் பாண்டியராஜனுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் புரி கடிதம் எழுதியுள்ளார். சென்னை வரும் அனைத்து பயணிகள் விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் பாண்டியராஜனுக்கு மத்திய விமான போக்குவரத்துதுறை அமைச்சர் மத்திய அமைச்சர் ஹர்தீப் புரி கடிதம் எழுதியுள்ளார். மேலும் தமிழில் அறிவிப்பு வெளியிட விமான நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் சிங்கப்பூரின் ஸ்கூட் விமானத்தில் துணை விமானியாக பணி செய்த […]
மிசா சட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கைதானாதை பற்றி அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்த கருத்துக்கு தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள கோட்டூர் ரோடு மேம்பாலத்தில் கடந்த 06-ம் தேதி அதிகாலை 05 மணிக்கு அமைச்சர் பாண்டியராஜனின் உருவ பொம்மை துாக்கில் தொங்க விடப்பட்டு இருந்தது. அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு போலீசார் உருவ பொம்மையை அப்புறப்படுத்தினர்.பின்னர் […]