சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6ம் கட்ட அகழாய்வுப் பணி சமீபத்தில் தொடங்கியது. கீழடியைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வு பணிகள் செய்யப்படுகிறது. கீழடியின் தொடர்ச்சியான அகழாய்வில் ஈமக்காட்டை அகழாய்வு செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 6ம் கட்ட அகழாய்வில் தற்போது வரை 8 தாழிகள், 5 பானைகள், 3 சுடுமண் குடுவைகள் உள்ளிட்ட 15,000 பொருட்கள் கிடைத்துள்ளன என்றும் அகழாய்வில் கிடைத்த பொருட்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் அமைச்சர் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பனை மாநாட்டில், விழிப்புணர்வு ஊர்வலத்தினை அமைச்சர் பாண்டியராஜன், தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், தனது தாத்தா பனை மரம் ஏறியவர் என்பதால் இந்நிகழ்ச்சியில் தான் கலந்துகொண்டதாக தெரிவித்தார். நீர்நிலைகளை பாதுகாத்திட பனை மரம் முக்கிய பங்காற்றுவதாகவும் முதிர்ச்சி அடைந்த பனை மரங்களை விற்பதற்கு அரசு சார்பில் முயற்சி எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் மாற்றுதிறனாளிகளுக்கு இலவச வாகனம் வழங்குவது போல் பனை ஏறும் தொழிலாளர்களுக்கு பனை ஏறும் கருவி வழங்குவதற்கான திட்டத்தை […]
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தோடர், படுகர் மொழிகளை மீட்டெடுக்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இரு மொழிகளையும் பாதுகாக்க, ஒரு மில்லியன் டாலர் வழங்குமாறு, யுனெஸ்கோவிடம் உதவி கேட்டுள்ளோம் . தமிழர்களின் தொன்மையான ஓலைச்சுவடி, செப்பேடு, பாறை ஓவியங்கள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாஃபா பாண்டியராஜன் கூறினார்.
சென்னையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் இருந்து ஐஐடிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், ஐஐடி நுழைவுத் தேர்வுகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் நீட் தேர்வை போல் ஐஐடி, ஜேஇஇ தேர்வுகளுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் பொழுது ஐஐடி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.