மதுரை அரசு ராஜாஜி கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ஆக்சிஜன் லாரிக்காக நள்ளிரவு 1 மணி வரை காத்திருந்து எம்.பி. வெங்கடேசன் மற்றும் அமைச்சர் பி.மூர்த்தி பணியாற்றியுள்ள சம்பவம் பொது மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 24 மணி நேரமும் தென்மாவட்ட மக்கள் அனைவரும் சிகிச்சை பெறும் வகையில் சிறப்பு மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அதன்படி,மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டில் 1,200 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்,நேற்று மாலை 3 மணிக்கு வரவேண்டிய ஆக்சிஜன் […]