வணிக வரித்துறையில் ரூ.1.5 லட்சம் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் தகவல். நெல்லை மண்டலத்தில் பத்திரப்பதிவுத்துறையில் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு மண்டல அளவில் பதிவுத்துறையில் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இதன்பின் 2023 மார்ச் மாதத்திற்குள் பதிவுத்துறை மற்றும் வணிக வரித்துறையில் ரூ.1.5 லட்சம் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று […]
பட்டாசு ஆலை விதிமுறைகள் மீறி செயல்பட்டு இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். – அமைச்சர் மூர்த்தி உறுதி. இன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை எனும் கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். விபத்து ஏற்பட்ட பாட்டாசு ஆலைக்கு மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், அமைச்சர் மூர்த்தி, முன்னாள் அமைச்சர் ஆ.பி.உதயகுமார் ஆகியோர் வந்து ஆய்வு செய்தனர். […]
மதுரை அழகு சிறையில் தீ விபத்து ஏற்பட்ட பாட்டாசு ஆலையில் அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் அனிஷ் சேகர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகு சிறை கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலையின் இன்று தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலை தரைமட்டமானது. இதில் 15க்கும் மேற்பட்டவர்கள் காலையில் வேலை செய்து வந்துள்ளனர். அவர்களில் 10க்கும் மேற்பட்டவர்கள் சிகிக்சைக்காக மருத்துவமனையில் உள்ளனர். அதில் 5 பேர் படுகாயமுற்று தீவிர சிகிச்சையில் […]
போலி பாத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரம் சார்பதிவாளருக்கு இருக்கும் வண்ணம் சட்டம் விரைவில் அமலுக்கு வரும். – பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தகவல். மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள பதிவுத்துறை அலுவலகத்தில் இணையதள சேவை பாதிப்பு இருப்பதாக புகார் எழுந்தாது. அதன் காரணமாக பத்திரப்பதிவு தாமதமாக நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்தது. இதனை அடுத்து பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள் நேரில் சென்று பத்திரப்பதிவு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிந்த பின்னர் […]
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான சிறப்பு பரிசுகள் என்ன என்பது தொடர்பான தகவலை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மிகவும் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்று வரும் நிலையில், இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெறக்கூடிய காளை மற்றும் போட்டியாளர்களுக்கான சிறப்பு பரிசுகள் என்ன என்பது தொடர்பாக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார். அதன் படி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் சார்பாக சிறந்த காளைக்கு கார் பரிசாக வழங்கப்படும் எனவும், […]
அவனியாபுரம் ஜல்லிகட்டு குழு அமைப்பதில் உடன்பாடு ஏற்படாததால் மாவட்ட நிர்வாகம் நடத்த அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக இரு குழுக்களுக்கு இடையே சமரசம் ஏற்படாததால் அரசே போட்டியை நடத்துகிறது என்று ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காண அந்தந்த கிராம மக்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் அருகில் உள்ள கிராம மக்கள், வெளி மாவட்டம் […]
ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு இன மாடுகள் மட்டுமே அனுமதி என்று அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு. மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு இன மாடுகள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்றும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலப்பின மாடுகளுக்கு டோக்கன் வழங்கமாட்டோம் எனவும் தெரிவித்தார். மேலும், நாட்டுமாடு இனங்களை அதிகப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.
முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி ஊழல் குறித்து விசாரிக்க விரைவில் குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு. ஜோலார்பேட்டையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 16ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர். இந்த சோதனையில், பணம், நகை, முக்கிய ஆவணங்கள் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்ளிட்ட 9 சொகுசு கார்கள் கைப்பற்றப்பட்டன என்று லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை மூலம் […]
பதிவு துறையில் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகள் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி, 20 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், வணிக வரித்துறையின் சேவைகள் அனைத்தும் தமிழில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக வரி செலுத்துவதற்கான போலி பட்டியல் தயாரிப்போர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் புதிய […]