உயர்ந்து வரும் சின்ன வெங்காயத்தின் விலையை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி. வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் சென்னை சேப்பாக்கத்தில் கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு பணி நியமான ஆணைகளை வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் திமுக ஆட்சிக்கு வந்த பின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் 1145 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ள நிலையில், […]
தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாத போலி விவசாயி எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒரு வெற்று அறிக்கையினை வெளியிடுகிறார். தமிழக எதிர்க்கட்சி தலைவர் டெல்டா மாவட்டங்களில் மழையினால் மூழ்கி சேதமடைந்த குறுவை பயிர்களுக்கான கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி பாதிப்படைந்த விவசாயிகளுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டுமென தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இதுகுறித்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழக […]
2022-23- ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில்,பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இனி உழவர் சந்தைகள் மாலையிலும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.அந்த வகையில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய மாவட்டத்திற்கு ஒரு உழவர் சந்தை மாலையில் செயல்பட அனுமதி வழங்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பொதுவாக,உழவர் சந்தைகள் காலையில் மட்டுமே செயல்பட்டு வரும் நிலையில்,மாலை நேரத்திலும் உழவர் சந்தைகள் செயல்படவேண்டும் என்று […]
தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை அத்துறைக்கான அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதன்படி,பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.அந்த வகையில்,முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட் திட்டத்தின் மூலம் 3,000 பம்பு செட்டுகள் 70 சதவீத மானிய விலையில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,செல்போன் மூலம் இருக்கும் இடத்தில் இருந்து பம்பு செட்டுகளை இயக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். குறிப்பாக,பம்பு செட்டுகளை இயக்க இரவு […]
உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என நானும் விரும்புகிறேன் என்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேட்டி. தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில் தமிழக உழவர் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பொது மக்களின் மனுக்களை பெற்றுக்கொண்டார். இதன்பின் பேசிய அவர், உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என நானும் விரும்புகிறேன். அவரால் பல நல்ல திட்டங்கள் பொது மக்களுக்கு எளிதில் கிடைக்கும் என்றார். கடந்த ஆறு மாத காலமாக சட்டமன்ற உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் […]
மாவு பூச்சி தாக்குதலுக்கு உள்ளான மரவள்ளிக்கிழங்கு பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 2,000 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் போன்ற 10 மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி கிழங்கு பயிரானது, மாவு பூச்சியின் தாக்குதலினால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.இதனால்,பாதிக்கப்பட்ட மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று,சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே […]
காய்கறி அங்காடிகள் அமைக்க கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு 40% மானியம் அல்லது 2 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில்,தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.இந்த நிலையில், இன்று இரண்டாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.முதன்முறையாக தனி வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் […]
இலவச மின்சாரத்திட்டத்திற்கு ரூ.4508 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இன்று இரண்டாவது நாளாக சட்டப்பேரவை கூடியுள்ள நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக இன்று சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த வேளாண் இ-பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில்,இலவச மின்சாரத்திட்டத்திற்கு ரூ.4508 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது: “வழமான விவசாயத்திற்கு பாசன நீர் மிக முக்கியம்,தமிழ்நாட்டில் கிணறு,ஆழ்துறை கிணற்றில் உள்ள நீரை பம்பு […]
நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை ரூ.100 ஆக உயர்த்தப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கி, அந்த கூட்டத்தொடரில் சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த […]
கோவை,தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் காவி உடை திருவள்ளுவர் படத்தை அகற்றி,வேறு படம் பொருத்தப்பட்டு இருப்பதாக,வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கோவை,தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகளின் போது,காவி உடையில் திருவள்ளுவர் படம் பொருத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.இந்நிகழ்வு தற்போது சர்சையை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து,காவி உடையில் பொருத்தப்பட்ட திருவள்ளுவர் படத்தை நீக்கி,தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட வெள்ளை உடை அணிந்த திருவள்ளுவர் படைத்தை மீண்டும் பொருத்த […]