பட்டியலின மக்களுக்கு புதிய குடிநீர் தொட்டி கட்டித் தரப்படும் அமைச்சர் மெய்யநாதன் பேட்டி. அமைச்சர் மெய்யநாதன் அவர்கள், அய்யனார்கோயிலில் சமத்துவ பொங்கல் வழிபாட்டில் கலந்து கொண்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், புதுக்கோட்டை அருகே இறையூரில் பட்டியலின மக்களுக்கு புதிய குடிநீர் தொட்டி கட்டித் தரப்படும். ஓரிரு நாட்களில் இதற்கான பணிகள் தொடங்கும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு அமைச்சர் எஸ்.ரகுபதி விருப்ப மனு கொடுத்துள்ளார். அதே போல அமைச்சர் மெய்யநாதன் ஆதரவாளர்கள் விருப்ப மனு கொடுத்துள்ளனர். தமிழகத்தில் ஆளும் திமுக கட்சியில் மாவட்ட செயலாளர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதில் போட்டியிட பலரும் விருப்ப மனுக்களை கொடுத்து வருகின்றனர். இதில் , புதுக்கோட்டை மாவட்ட தெற்கு பகுதி பொறுப்பாளராக கட்சி தலைமையால் நியமிக்கப்பட்ட சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி. தேர்தலில் போட்டியிட்டு புதுக்கோட்டை மாவட்ட தெற்கு பகுதி […]
ஐஐடி நிபுணர் குழு ஆய்வறிக்கையின்படி காவிரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தகவல். காவிரி ஆற்றில் மருத்துவக்கழிவு, பூச்சிக்கொல்லி, உலோக கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவை கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். காவிரியில் மருத்துவ மாசு அதிகமுள்ளதா என்பதை ஆய்வு செய்ய மாசு கட்டுப்பாட்டு பொறியாளர்கள் மாதிரிகளை சேகரித்துள்ளனர். காவிரி உள்ளிட்ட முக்கிய நீர் ஆதாரங்களை பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவிரி […]
தமிழகத்தில் அரசு விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் தயாரித்த 3,000 தொழிற்சாலைகள் மூடல் அமைச்சர் மெய்யநாதன் தகவல். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3.98 கோடி ஊக்கத்தொகை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டார். இதன்பின் செய்தியாள்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் 15 நபர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.3.98 கோடி காசோலைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். மாரியப்பன் […]