சென்னையில் மிக்ஜாம் புயலின் தாக்கம் சற்று குறைந்து உள்ளது. புயலானது தற்போது சென்னையை விட்டு விலகி ஆந்திர மாநில கடற்கரையை நோக்கி சென்றுவிட்டது. இன்று முற்பகல் ஆந்திர பிரதேசம் பாபட்லா கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி மிக்ஜாம் புயலானது வடக்கு நோக்கி நகர்ந்து உள்ளது. மிகஜாம் புயல் சென்னையை கடந்து சென்றும், புயலின் தாக்கம் தலைநகர் சென்னையை வெகுவாக பாதித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து உள்ளதாக தகவல்கள் […]
தமிழகம்:கனமழையால் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவ மழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ,தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,சென்னையில் பெய்த மழையால் எங்கு திரும்பினாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து,வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.இதன்காரணமாக,மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,மழை நீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையில்,மழை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் […]