தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனாவில் இருந்து குணமடைந்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தற்போது கொரோனாவில் இருந்து அமைச்சர் காமராஜ் குணமடைந்தார். கொரோனாவில் […]
முழுமையான நெல் கொள்முதல் தமிழகத்தில் தான் நடைபெறுகிறது என அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும்தான் விவசாயிகளிடம் இருந்து முழுமையாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்கள் கூறியுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களை அமைச்சர் ஓ எஸ் மணியன் மற்றும் காமராஜர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் காமராஜ் நாட்டிலேயே தமிழகத்தில் தான் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முழுமையாக நெல் கொள்முதல் […]
தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளதால், அதற்கான வேலைகளை அரசியல் கட்சிகள் கையாண்டு வருகின்றனர். இதனால் விமசனங்கள் அதிகமாக வந்துகொண்டு இருக்கிறது. அந்தவகையில், 6 மாதத்தில் விடியல் பிறக்கும் என முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய […]
ஸ்டாலின் பொறுப்பான நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும் பொறுப்பில்லாமல் செயல்படக்கூடாது – அமைச்சர் காமராஜ். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், முதல்வர் எடுத்துவரும் நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அசாதாரண சூழலில் முதல்வர் எடுத்துவரும் நடவடிக்கை பேசப்படக்கூடிய வகையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு பணிக்காக குழுக்கள் அமைத்து துறைரீதியான ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன. மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு சேர்ப்பதை உணவுத்துறை […]
தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் தடையின்றி கிடைக்கிறது – அமைச்சர் காமராஜ். தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் தடையின்றி கிடைக்கிறது என்று அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு சேர்ப்பதை உணவுத்துறை முறையாக செயல்படுத்தியுள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதத்திற்கு கூடுதலாக அரிசி வழங்கப்பட்டுள்ளது. பொதுமுடக்கத்தால் மக்கள் பாதிக்காத வகையில் 65 நாட்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது. நியாயவிலை கடைகளில் அரிசி, பருப்பு, […]
மத்திய அரசு ரூ.2,609 கோடி மானியத்தை வழங்க வேண்டும் என்று அமைச்சர் காமராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ரூ.2,609 கோடி மானியத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுடன் நடைபெற்ற ஆலோசனையில் அமைச்சர் காமராஜ் தமிழ்நாட்டு வழங்கவேண்டிய மானியத்தை வழங்க வேண்டும் என்று அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் மே 20 ஆம் தேதி வரை 1.34 லட்சம் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்படவிருந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் தற்போதைக்கு திட்டம் சத்தியமில்லை என திருவாரூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு பின் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். இதனிடையே ஏற்கனவே ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் முதற்கட்டமாக நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், வரும் 1 ம் தேதி […]
தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நடைமுறைக்கு வருகிறது என அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். ஏற்கனவே ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் முதற்கட்டமாக நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், வரும் 1 ம் தேதி தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை முதல்கட்டமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் தொடங்கியுள்ள நிலையில், இத்திட்டம் தமிழகம் முழுவதும் எப்போது விரிவுபடுத்தப்படும் என கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் முழுவதும் கணினி மயமாக்கப்பட்டிருப்பதால், ஸ்மார்ட் கார்டுகளின் மூலமாக பொதுமக்கள் தாங்களே பெயர் திருத்தம் செய்து கொள்ளும் வசதியும், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் ஒரே நாடு […]
திருவாரூரில் நடைபெற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ன அறிவிப்பை வெளியிட போகிறார் என்ற பதட்டத்திலே மு.க.ஸ்டாலின் இருப்பதாக விமர்சித்தார். பின்னர் திமுக கட்சி பிரசாந்த் கிஷோர் தலைமையில் இயங்குகிற கார்ப்பரேட் கட்சி என்றும், அதிமுக மக்களுக்கான கட்சி என்றும் தெரிவித்தார்.
இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது.அப்பொழுது அமைச்சர் காமராஜ் பேசினார்.அவர் கூறியது ,ரேஷன் கடைகளில் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் பொதுமக்களுக்கு தரப்படும். வீட்டில் ஏசி போன்றவை இருந்தால் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என்பது தவறான தகவல். தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் பேசினார்.
தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை.இதனால் அரசியல் பிரமுகர்கள் அதிமுகவின் செல்வாக்கு குறைந்து விட்டதாக கூறிவருகின்றனர். திருவாரூரில் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையே பின்பற்றப்படும். இன்னும் 6 மாதத்தில் அதிமுக விஸ்வரூபம் எடுக்கும்.மக்களை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
95% முதல் 97% வரை பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுவிட்டது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் காமராஜ் கூறுகையில், தமிழகம் முழுவதும் 95% முதல் 97% வரை பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுவிட்டது . மாநகரங்களில் இருந்து முன்னதாகவே வெளியூர் சென்றிருக்கும் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது நீட்டிக்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் புதிய தொழிற்பேட்டை விரைவில் அமைக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூரில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை முதலீட்டாளர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வழங்கினார். அப்போது பேசிய அவர், உலக தொழில் முதலீட்டை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் 201 முதலீட்டாளர்களிடம் இருந்து 125 கோடி முதலீடுகள் பெறப்பட்டுள்ளது என்றார். திருவாரூர் மாவட்டத்தில் விரைவில் […]