மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நீட் தமிழகத்திற்கு கூடாது என்பது தான் அதிமுக அரசின் எண்ணம்.தமிழகத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கவேண்டும் என்று தான் விரும்புகிறோம். ஆனால் இந்த நீட் தேர்விற்கு விதை போட்டவர்கள் காங்கிரஸ், திமுக தான். எனவே பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் பொய் சொல்லி வாழ்ந்தவர்கள் இல்லை. மெய் சொல்லி கெட்டவர்கள் இல்லை. எனவே பொய் சொல்பவர்கள் தக்க பலனை பெறுவார்கள். ஒரு […]
3 எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் இதை விசாரித்த உச்சநீதிமன்றம் 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,3 எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க நடவடிக்கை […]